பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் போகிறது. அதுவும் கடந்தவாரம் ஒவ்வொரு போட்டியாளரின் குடும்பத்தினரும் வீட்டிற்குள் வருகை தந்து பரபரப்பை கூட்டினர். கடந்தவாரம் வீட்டிலிருந்து வெளியேறிய சேரன் சீக்ரட் ரூமில் வைத்திருந்து மீண்டும் வீட்டிற்குள் அனுமதிக்கப்பட்டார்.
இந்த வாரம் வீட்டிலிருந்து யார் வெளியேறுவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்துவந்த சூழலில் வனிதா வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார் என்று உறுதியான தகவல் கிடைத்துள்ளது. இவர் ஏற்கனவே ஒருமுறை வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு விஜய் டிவியின் கருணையால் மீண்டும் போட்டியாளராக வீட்டிற்குள் வந்தார், ஆனாலும் அவர் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.