மதுமிதா மீது போலிஸில் புகார் அளித்த பிக்பாஸ் டிவி சானல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் வலுக்கட்டாயமாக வெளியேறியவர் காமெடி நடிகை மதுமிதா. அவர் சக போட்டியாளர்களுடன் எழுந்த பேச்சு வார்த்தை சண்டையில் தற்கொலை செய்ய முயன்றதே காரணம் என சொல்லப்பட்டது.

அதே வேளையில் அவர் கத்தியால் கையை அறுத்துக்கொண்ட போது கஸ்தூரி மற்றும் சேரன் இருவரும் தான் காப்பாற்றியுள்ளனர். மதுமிதாவின் இந்த நடவடிக்கை நிகழ்ச்சியின் விதி மீறலாக இருந்தது. இதுகுறித்து கமல்ஹாசனும் கவலை தெரிவித்தார். இந்நிலையில் தற்போது மதுமிதா மீது டிவி சானல் நிகழ்ச்சி குழு போலிசில் புகார் அளித்துள்ளது.

இதில் அவர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் முன்பே ரூ 11 லட்சத்து 50 ஆயிரம் சம்பளம் பெற்றுள்ளார். பின்னர் மீதமுள்ள ஒவ்வொரு நாளும் 80 ஆயிரம் என்ற கணக்கில் 42 நாட்களுக்கான பணத்தை பின்னர் தருவதாக நிகழ்ச்சி குழு கூறியுள்ளது.

இந்நிலையில் அவர், அண்மையில் பிக்பஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் டீனா என்பவருக்கு போனில் வாட்ஸ் ஆப் வாய்ஸ் மெசேஜ் மூலம் இரண்டு நாட்களில் பணத்தை தராவிட்டால் தற்கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இருவரிடமும் இதுகுறித்து கேட்ட போது மதுமிதா, போலிஸ் தரப்பிலோ அல்லது டிவி சானல் மூலமாக அப்படியான ஒரு தகவம் எனக்கு வரவில்லை என கூறியுள்ளார். அதே வேளையில் டிவி சானல் நிறுவனம் மதுமிதா மீது எந்த புகாரும் கொடுக்கப்படவில்லை என கூறியுள்ளது. இதுவே உண்மை என தெரிகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*