கடன் பிரச்னை என்பது வாழ்வில் நிம்மதி இழக்கச் செய்யும் ஒன்று. `கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்ற வரி சொல்லும் வலியைக் கடன்பட்ட ஒவ்வொருவரும் அறிவர். கடன் பிரச்னைகளிலிருந்து விடுபட பல்வேறு பரிகாரங்களும் வழிபாடுகளும் இன்று ஜோதிடர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன. இதில் சில, பொருள் செலவு கொண்டவையாகவும் அமைந்துவிடுகிறது. ஆனால், பொருள் செலவின்றி நம் வீட்டிலேயே செய்யும் ஒரு பரிகாரமே `மைத்ர முகூர்த்தம்’ என்கின்றனர் ஜோதிடர்கள்.
அது என்ன மைத்ர முகூர்த்தம்?
அஷ்வினி நட்சத்திர நாளில் மேஷ லக்ன நேரமும் அனுஷ நட்சத்திர நாளின் விருச்சிக லக்ன நேரமும் ‘மைத்ர முகூர்த்தம்’ எனப்படுகின்றன. அப்படி ஒரு விசேஷமான முகூர்த்தம் இன்று (20/8/19) வாய்க்கிறது. இதேபோல் ஒவ்வொரு மாதமும் இந்த முகூர்த்த நேரங்கள் ஓரிரு நாள்களில் வரும்.
என்ன செய்ய வேண்டும்?
அடைக்க வேண்டிய கடனில் ஒரு சிறிய பகுதியை இந்த நேரத்தில் கடன் கொடுத்தவரிடம் திருப்பிக் கொடுங்கள். கைவசம் இருக்கும் பணம் 100 ரூபாய் ஆனாலும் அதைக் கடன் கொடுத்தவருக்கு இந்த நேரத்தில் கொடுங்கள். வங்கிக் கடன் பெற்றிருப்பவர்கள் இந்த நேரத்தில் இணைய வழி சிறு தொகையைச் செலுத்தலாம்.
கடன்கொடுத்தவரை இந்த நேரத்தில் சந்திக்கமுடியாதவராக இருந்தால் அவர் பெயரை ஒரு கவரில் எழுதி அதில் அந்தப் பணத்தை வைத்து சுவாமி படத்திற்கு அருகில் அல்லது உங்கள் பீரோவில் வைத்துவிடுங்கள். இப்படித் தொடர்ந்து செய்துவர விரைவில் உங்கள் கடன் அடைபடும் என்கின்றனர் பெரியோர்கள்.
மைத்ர முகூர்த்தத்தின் தாத்பர்யம் என்ன என்பது குறித்து ஆஸ்ட்ரோ கிருஷ்ணனிடம் கேட்டபோது
“பொதுவாகவே கடனை அடைப்பதற்கு மனம் சார்ந்த சில உந்துதல்கள், முயற்சிகள் தேவை. அஷ்வினி நட்சத்திரம் என்பது கேதுவுடைய நட்சத்திரம். இதில் மேஷ லக்னம் என்பது செவ்வாயின் ஆதிக்கம் கொண்டது. பொதுவாகவே கேது ஒரு பிரச்னையின் தீவிரத்தைக் குறைக்கக் கூடியவர். கடன் என்பதை அடைக்க, உழைப்பும் முயற்சியும் தேவை. அதற்குச் செவ்வாயின் அனுக்கிரகம் தேவை.
மைத்ர முகூர்த்த நேரம் இன்று :
இரவு 10.12 முதல் 12.12 வரை நாளை : இரவு 10.16 முதல் 10.45 வரை
மைத்ர முகூர்த்தம்