பிக்பாஸ் நிகழ்ச்சி நடிகர் கமல்ஹாசனை முன் வைத்தே பிரம்மாண்டமாக தொடங்கியது. 1,2 சீசன் வெற்றிகளை தொடர்ந்து 3வது சீசன் தொடங்கப்பட்டு பல சண்டை, சர்ச்சைகளோடு ஓடிக் கொண்டிருக்கிறது.
தற்போது பிக்பாஸ் வீட்டில் வனிதா ரீஎன்ரிக்கு பிறகு பெரிய கலவரமே உண்டாகியுள்ளது, பிக்பாஸ் வீட்டினர் இரண்டு தரப்பாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கி வருகின்றனர்.
இதற்கு முடிவுக்கட்ட ஒரே வழி கமல்ஹாசன் வந்து பஞ்சாயத்து பேசுவது தான், ஆனால், தற்போது அதற்கும் வேலை இருக்காது போல.
ஆம், வார இறுதியில் வரும் கமல்ஹாசன் 2 வாரத்திற்கு வர மாட்டார் என்கின்றனர், காரணம் இந்தியன் 2 படப்பிடிப்பு நடக்க இருப்பதால் தான் அவரால் வர முடியாது என்கின்றனர்.
ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை