நீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் 4 வயது சிறுவன் உயிர்காக்க உங்கள் உதவி தேவை!

0
8520

நான்கு வயதேயான சிறுவன். விளையாட்டுத்தனமாக ஓடியாடிக் கொண்டிருந்தவன். திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் சங்கர் நாகயா மற்றும் ரீத்தா ஆகியோரின் மகன்தான் மோனீஷ்.

மோனிஷின் பெற்றோருக்கு 40 களின் நடுப்பகுதியில் வயது இருக்கும் என தெரிகிறது. அவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர் – 18, 14 மற்றும் 12 வயதுடையவர்கள் அவர்கள். அரசுப் பள்ளியில் படிக்கின்றனர்.

மோனிஷ் பிறந்த சில காலத்தில், அந்த சிறுவனுக்கு, இதய பிரச்சினை இருப்பது தெரியவந்தது. தினக் கூலி தொழிலாளர்களாக வேலை செய்யும் பெற்றோர் இருவரும் மோனிஷின் உடல்நிலை காரணமாக எதுவும் செய்ய முடியவில்லை, ரீத்தா தான் பார்த்த வேலையை விட்டுவிட்டார்.

மோனீஷுக்கு, கவாஷிமா வகை சிகிச்சையளிக்க மியாட் டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அறுவை சிகிச்சை, ஐ.சி.யூ மற்றும் மருத்துவமனையில் தங்கியிருத்தல், பிந்தைய செக்அப்புகள், மற்றும் மருந்துகள் உட்பட, இதற்கு, மதிப்பிடப்பட்ட செலவு ரூ. 2,10,000 ஆகிறது.

மோனிஷின் பெற்றோர் உண்மையில் உதவியின்றி தவிக்கிறார்கள். தங்கள் மகனை காப்பாற்ற துடிக்கிறார்கள். இரக்கத்துடன் வழங்கப்படும் எந்தவொரு உதவியையும் ஏற்க அவர்கள் தயாராக உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here