வனிதாவை கன்னத்தில் அறைந்த முகென் – ரெட் கார்டுடன் வெளியேற்றப்பட்டார்?

100 நாட்கள் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி 50-வது நாளைக் கடந்துள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியிலிருந்து கடைசியாக சாக்‌ஷி வெளியேறினார். அதேவாரத்தில் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்தார்.

இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் நேற்று மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். தான் வெளியேற்றப்பட்ட பிறகு நிகழ்ச்சியை வெளியில் இருந்து பார்த்து வந்த வனிதா விஜயகுமார், வீட்டினுள் இருப்பவர்களை மக்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதையும் போட்டியாளர்களுக்கு விளக்கிக் கூறினார்.

அப்போது அஜித்துடன் அபிராமி நடித்த நேர்கொண்ட பார்வையை சுட்டிக் காட்டி அட்வைஸ் கொடுத்த வனிதா, “நோ மீன்ஸ் நோ’ என்பதுதான் படத்தின் கதை அதை புரிந்து கொண்டுதான் அபிராமி நடித்தாரா என்பதே தெரியவில்லை. ஒரு பெண் தனது விருப்பம்போல் உடை அணியலாம். அது அவளுடைய வாழ்க்கை. இப்படி ஒரு கதையுள்ள படத்தில் நடித்து விட்டு, இங்கு வந்து உன்னுடைய தனித்தன்மையை தொலைத்துவிட்டு ஒருவன் பின்னால் உன்னால் எப்படி ஓட முடிந்தது” என்றும் கேள்வி எழுப்பினார்.

அபிராமி மட்டுமல்லாது அனைவரையும் வெளுத்து வாங்கிய வனிதா, கவினைப் பார்த்து நீ வொர்த்தே இல்ல” என்றார். இதனால் வனிதாவின் என்ட்ரியைத் தொடர்ந்து மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில் இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிக்கான இரண்டு புரமோ வீடியோக்களை நிகழ்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது. அதில் முதல் வீடியோவில் அபிராமிக்கு அட்வைஸ் கொடுத்த வனிதா விஜயகுமார், முகென் பின்னால் நீ ஓடுவதால் அவன் தான் ஹீரோவாகிவிட்டான் என்றும் முகெனுக்கு வெளியில் இருக்கும் காதல் குறித்தும் பேசியுள்ளார்.

இந்த உரையாடலைத் தொடர்ந்து அபிராமி, முகென் இடையே மோதல் வலுத்துள்ளது. இருவரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்ள முயலும் காட்சியும் நிகழ்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது. அதில், இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலைத் தடுக்க பிக்பாஸ் வீட்டிலிருக்கும் மற்ற போட்டியாளர்கள் முயல்கின்றனர். இதனால் பிக்பாஸ் வீட்டை பரபரப்பு சூழ்ந்துள்ளது.

இந்தவாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் அபிராமி மற்றும் முகென் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*