நேர்கொண்ட பார்வை ஐந்து நாள் வசூல் – அதிர்ந்த கோலிவுட் லேட்டஸ் ரிப்போர்ட்!

0
1338

ஐந்து நாள் முடிவில் நேர்கொண்ட பார்வை படத்தின் வசூல் நிலவரம் என்ன தெரியுமா நடிகர் அஜித் நடித்துள “நேர்கொண்ட பார்வை” திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகவும் புதிய களம். அதில் அஜித் போன்ற பெரிய நடிகர்கள் நடிப்பது பெரிதும் வரவேற்பு பெற்றுள்ளது.

சென்ற வாரம் வியாழக்கிழமை வெளிவந்த நேர்கொண்ட பார்வை படம் சென்னை பகுதியில் மட்டும் முதல் நாளில் ஒன்றரை கோடிக்கும் மேல் வசூலித்தது.
அதற்கடுத்த நாட்களிலும் ஒரு கோடிக்கும் அதிகமான வசூல் தான் வந்தது. நேற்று திங்கட்கிழமை என்றாலும் “பக்ரீத்” விடுமுறை நாள் என்பதால் நேற்றும் ஒரு கோடிக்கு மேல் வசூல் வந்துள்ளது.

லேட்டஸ்ட் தகவல்களின் படி நேற்று சென்னையில் நேர்கொண்ட பார்வை படம் 1.15 கோடி ருபாய் வசூலித்துள்ளது. மொத்தமாக ஐந்து நாட்களில் 6.7 கோடி ருபாய் சென்னையில் இருந்து மட்டும் கிடைத்துள்ளது.

தொடர்ந்து ஐந்து நாட்கள் வசூல் வேட்டை நடத்தியுள்ள இந்த படம் இந்தியா தவிர உலக நாடுகளில் 2 மில்லியன் டாலர், அதாவது 15 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

ஒரு ரீமேக் படம்வெளிநாடுகளில் வெளியாகி இவ்வளவு வசூலித்துள்ளது இது தான் முதன் முறை என்கிறார்கள் பாக்ஸ்ஆஃபிஸ் வட்டாரங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here