தல என்றாலே பாக்ஸ் ஆபிஸ் மன்னன் தான். விஸ்வாசம் என்ற படம் மூலம் பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்ட அவர் இப்போது நேர்கொண்ட பார்வை பட ரிலீஸ் மூலமாகவும் சாதனை செய்து வருகிறார்.
படம் உலகம் முழுவதும் வெற்றிகரமாக ரிலீஸ் ஆகி ஓடிக் கொண்டிருக்கிறது. எல்லா இடத்திலும் அஜித்திற்கு பாராட்டு மழை தான், ஆனால் அவர் இதையெல்லாம் பெரிதாக கூட நினைக்காமல் தனது வேலையை கவனித்து வருவார்.
முதல் நாளில் 106 ஷோக்கள் ஓடி சாதனை படைத்துள்ளது நேர்கொண்ட பார்வை, சென்னையில் உள்ள மாயாஜால் திரையரங்கில் தான் இந்த சாதனை நடந்துள்ளது.
அதுவும் வேலை நாளில் ஒரு படத்துக்கு இத்தனை ஷோக்கள் என்றால் சாதனை தான்.