தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுபவர் அஜித். இவர் நடிப்பில் இன்று நேர்கொண்ட பார்வை படம் பிரமாண்டமாக வந்துள்ளது.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது, அஜித் திரைப்பயணத்தில் மிகமுக்கிய படமாக இது பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் சிங்கப்பூரில் இப்படம் ப்ரீமியர் மற்றும் நேற்றைய காட்சிகள் மட்டுமே ரூ 40 லட்சம் வசூலை தந்துள்ளதாம்.
கண்டிப்பாக அஜித்திற்கு இது மிகப்பெரிய ஓப்பனிங் தான், இன்னும் முதல் நாள் முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.