அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை – உயிர்கள்மேல் அருள் இல்லாதார்க்கு வீட்டுலகத்து இன்பம் இல்லை என்று சொல்வார்கள். பணம் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் இன்றியமையாத பங்கை வகிக்கிறது. இப்படிப்பட்ட செல்வத்தை மகாலட்சுமியின் பார்வையும் குபேரனின் அருளும் இருந்தால் எளிதாக அடையலாம். குபேரனை எப்படி வழிபட்டால் வீட்டில் செல்வவளம் பெருகும் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.
நாம் மேற்கொள்ளும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க வேண்டும் என்றால் குபேரனுக்கு பாலாபிஷேகம் செய்து சிவப்பு நிற மலர்களால் அரசனை செய்துவர வேண்டும்.
திருமகளான லட்சுமி தேவி தான் செல்வத்திற்கு அதிபதியாகும். குபேரன் லட்சுமிதேவியின் செல்வத்தை பராமரிக்கும் பணியையே செய்து வருகிறார். எனவே குபேரன் படத்தை தனியாக வைத்து விழிப்பட கூடாது, எப்பொழுதும் லட்சுமி தேவியுடன் இருக்கும் குபேரன் படத்தையே வணங்க வேண்டும்.
குபேரன் சிலை என்று பரவலாக தவறான சிலைகளை வைத்து வணங்கும் பழக்கம் பலரிடம் அதிகரித்து வருகிறது. உண்மையில் இது சீன தேசத்தில் மக்களால் வணங்கப்படும் சிரிக்கும் புத்தரின் (laughing buddha) சிலையாகும். எனவே மக்கள் இந்த சிலைகளை வைத்து வணங்குவதால் எந்த பலனும் ஏற்படுவதில்லை.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருக்கும் குபேரன் வழிபட்ட குபேரலிங்கத்தை வழிபட்டு வந்தால் செல்வம் சேரும். குபேரனுக்கு உரிய நாள் வியாழக்கிழமை ஆகும். அதிலும் பூச நட்சத்திரத்துடன் கூடிய வியாழக்கிழமை மிகவும் விசேஷமானதாகும். எனவே அந்த நாட்களில் குபேரனை வழிபட்டு வந்தால் செல்வசெழிப்பு அதிகரிக்கும் அளவற்ற செல்வங்கள் சேரும்.