நான் அஜித்தின் மேல் வைத்து இருந்த இமேஜ் எல்லாம் சுக்குநூறாப் போச்சு!

நான் அஜித்தின் மேல் வைத்து இருந்த இமேஜ் எல்லாம் சுக்குநூறாப்போச்சு: ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒரே போடு சென்னை: அஜித் பற்றி தன் மனதில் வைத்திருந்த இமேஜ் அவரை நேரில் பார்த்தபோது உடைந்து சுக்குநூறாகிவிட்டதாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படம் ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி ரிலீஸாக உள்ளது. இது டாப்ஸி நடிப்பில் வெளியாகி ஹிட்டான பிங்க் இந்தி படத்தின் ரீமேக் ஆகும்.

டாப்ஸி கதாபாத்திரத்தில் நடித்தது குறித்தும், அஜித் பற்றியும் ஷ்ரத்தா பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,

நான் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தபோது பிங்க் படத்தை பார்க்கவில்லை. பிங்க் ரிலீஸானபோது நான் வெளிநாட்டில் இருந்தேன். நாடு திரும்பியபோது அந்த படம் தியேட்டர்களில் ஓடவில்லை. டிவியில் ஒளிபரப்பானபோது என்னால் பார்க்க முடியாமல் போனது. பிங்க் படத்தை பாரும்மா, அப்போ தான் டாப்ஸி என்ன செய்திருக்கிறார் என தெரியும் என்று சிலர் கூறினார்கள்.

பிங்க் படத்தை பார்க்காதீர்கள், பார்த்தால் டாப்ஸியின் நடிப்பை உள்வாங்கிவிடுவீர்கள் என்று சிலர் எச்சரித்தனர். நல்ல வேளை நான் பிங்க் பார்க்கவில்லை. படம் ரிலீஸான பிறகு என் நடிப்பை டாப்ஸியின் நடிப்புடன் ஒப்பிடுவார்கள் என்று தெரியும். ஆனால் அதை பற்றி எனக்கு கவலை இல்லை.

நேர்கொண்ட பார்வை செட்டில் தான் அஜித் சாரை முதன்முதலாக பார்த்தேன். ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நான் காரில் சென்றேன். நான் டிரைவர் அருகே அமர்ந்திருந்தேன். கார் செல்ல செல்ல அஜித் சார் தூரத்தில் நிற்பதை பார்த்தேன். பெரிய ஸ்டார் ஆச்சே, அவருடன் எப்படி பேசுவது, நடிப்பது என்று நினைத்தேன். நான் காரில் இருந்து இறங்கியதும் கை கொடுத்தார், விக்ரம் வேதா படத்தில் உங்களை பார்த்தேன் என்றார்.

அஜித் சார் பெரிய ஸ்டார், தல என்று நான் உருவாக்கி வைத்திருந்த இமேஜ் அவரை நேரில் பார்த்தபோது நொறுங்கிவிட்டது. அவர் ஒரு பெரிய ஸ்டார் போன்றே நடந்து கொள்ளவில்லை, ரொம்ப சாதாரணமாக இருந்தார். கருத்துக்கள் கூறினால் ஏற்றுக் கொள்வார், உதவி செய்ய ஒருபோதும் தயங்குவது இல்லை. சில நீளமான காட்சிகளில் கூடுதலாக டேக் வாங்கினால் செட்டில் உள்ள அனைவரிடமும் சாரி கேட்பார். அவர் ஒரு சிறந்த மனிதர் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*