பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து பிக்பாஸ் வீட்டிலிருந்து இதுவரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா ஆகியோர் வெளியேறியுள்ளனர்.
கடந்த வாரம் மீரா மிதுன் வெளியேறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் யாருமே எதிர்பார்க்காத மோகன் வைத்யா வெளியேறினார். இந்நிலையில் இந்த வாரம் மீரா மிதுனை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்று பிக்பாஸ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து எழுதி வந்தனர்.
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து யார் வெளியேறுவார் என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. இந்த வாரம் மீரா மிதுன் வெளியேற்றப்பட்டுள்ளார் என்று உறுதியான தகவல் கிடைத்துள்ளது.