கும்ப ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019..!

குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இன்னும் சில மாதங்களில் பெயர்ச்சி அடையப்போகிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி குருப்பெயர்ச்சி அக்டோபர் 29ஆம் தேதியும், திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவம்பர் 5ஆம் தேதியும் நிகழ்கிறது. விருச்சிக குருவால் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார வளர்ச்சி, திருமணம், புத்திரபாக்கியம் வேண்டுவோர் இந்த குருப்பெயர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். கும்பம் ராசிக்காரர்களுக்கு பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு இடப்பெயர்ச்சி அடையும் குருபகவானால் கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம், புத்திரபாக்கியம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

கர்ம ஸ்தானத்தில் சஞ்சரித்த குருபகவான் கர்ம காரகன் சனியின் பார்வையில் இருந்ததால் சில ஜாதகர்கள் பெற்றோர்களுக்கு கருமம் வைத்திய செலவுகளை செய்ய வைத்தது. உங்க ராசிக்கு 2 க்கும் 11க்கும் உடைய குரு உங்க ராசிக்கு முழுமையான சுபராவார். அவர் லாப ஸ்தானம் ஏறி. 3, 5, 7, ஆகிய ஸ்தானங்களை பார்க்கிறார். குரு தனுசு வீட்டிற்கு வரும் போது பிரச்சினைகள் தீர்ப்பார். வேலையில் உள்ள பிரச்சினைகள் தீரும். புரமோசன் கிடைக்கும்.

குரு பகவான் கும்ப ராசிக்கு சந்தோசத்தை தரப்போகிறார் ஒளிமயமான எதிர்காலம் என் எதிரே தெரிகிறது என்று பாடப்போகிறீர்கள். வாழ்க்கை லாபமாக வரப்போகிறது. ராசி நாதனோடு கேது சேரும் போது ஆன்மீக எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். வேலைக்காரர்களால் தொந்தரவு ஏற்பட்டது. இனி அந்த தொந்தரவுகள் தீரும் காலம் வந்து விட்டது. குரு மகிழ்ச்சியை தரப்போகிறார். அரசாங்க வேலை, போட்டி தேர்வுகளில் வெற்றி, குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியத்தை தருவார்.

பண லாபம் அதிகரிக்கும்

குரு உங்களுக்கு தன ஸ்தானாதிபதி லாப ஸ்தானாதிபதி. குரு பதினொன்றாம் வீட்டிற்கு வந்து தனது வீட்டில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். சனி கேது உடன் லாபத்தில் இருந்தாலும் பிரச்சினைகள் தொந்தரவுகள் அதிகம் இருந்தது. உடம்பில் பிரச்சினை வந்தது. இடுப்பில் பிரச்சினை வந்தது. குரு பகவான் லாபத்தில் வந்து ஆட்சியில் அமரும் காலத்தில் வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். தரம் உயரும் செல்வாக்கு உயரும். தொந்தரவு செய்தவர்கள் விலகி செல்வார்கள். நிம்மதியும் சந்தோசமும் வந்து சேரும். அலுவலகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். மூத்தவர்கள் ஆதரவு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்

வருமானம் அதிகரிக்கும் கடன் தீரும்

பத்தில் குரு இருந்த போது அல்லல் பட்டீர்கள். வருமானம் நின்று போனதே என்று கவலைப்பட வேண்டாம். பிரச்சினைகளில் இருந்து விடுதலை கிடைக்கும் காலம் வந்து விட்டது. கடன் தொல்லைகள் தீரும். கடன்கள் அடைபடும் நேரம் வந்து விட்டது. ஆட்சி பெற்ற குருவினால் ஆசைகள் நிறைவேறும். தொழில் அதிபர்களுக்கு வெற்றிகள் குவியும் வளர்ச்சிகள் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை கிடைக்கும். லாப ஸ்தானத்தில் சனி, கேது ஏற்கனவே இருக்கின்றனர். லாப ஸ்தானத்தில் 3 கிரகங்கள் இணைகிறார். மூத்த சகோதரர்களால் லாபம் கிடைக்கும். சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் தீரும்.

பிள்ளைகளின் பிரச்சினை தீரும்

குழந்தைகள் உயர்நிலையை அடைவார்கள். குரு லாபத்திற்கு வரும் போது பிள்ளைகள் ஜெயிப்பார்கள். பிள்ளைகள் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். கஷ்டப்பட்டு படிக்க வைத்து நல்ல வேலை அமையாமல் வருத்தப்பட்ட பெற்றோர்களின் கவலைகள் நீங்கும். பிள்ளைகளுக்கு நல்ல வேலையும் கை நிறைய சம்பாதித்து பெற்றோர்கள் கையில் கொடுப்பார்கள். அக்கம் பக்கத்தவர்களுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். வீடு மனைகளை விலைக்கு வாங்குவீர்கள். செய்யும் தொழில் நன்றாக லாபம் கிடைக்கும்.

குதூகலம் தரும் குரு பார்வை

குரு பார்வை ராசிக்கு 3,5,7ஆம் இடங்களின் மீது விழுகிறது. புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். பிசினஸ் பார்ட்டனர்கள் கிடைப்பார்கள். நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். மிகப்பெரிய மேன்மைகளை குரு உருவாக்குவார். பிள்ளைகள் மேன்மை அடைவார்கள். ராசிக்கு ஐந்தாம் வீட்டை குரு பார்க்கிறார். பிள்ளைகளுக்கு நல்ல மணவாழ்க்கை அமையும். குரு உங்க களத்திர ஸ்தானத்தை பார்ப்பதால் வருத்தங்கள் காணாமல் போகும். குரு ஏழாம் வீட்டை பார்ப்பதால் மிகப்பெரிய மேன்மை அடைவார்கள்.

தைரியம் கூடும்

ஜாதகத்தில் முன்றாம் பாவம் சகோதரம் சகாயம் தைரியம் வீரம் முயற்சி ஸ்தானம் என்று பெயர். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு அப்பா அம்மா இருந்து செய்ய வேண்டியதை சகோதரன் முன்னிலையில் இருந்து செய்வார்கள். சிலருக்கு சொத்து பரிமாற்றங்கள் நடக்கும். அது நல்ல மாற்றமாக இருக்கும். நல்ல வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை ஊதிய உயர்வு தலைமை பொறுப்பு தேடி வரலாம்.

கனவுகள் நனவாகும்

அடுத்து பூர்வபூண்ணிய ஸ்தானம் என்ற 5 ஆம் பாவத்தை பாவாதிபதி குருவே பார்க்கிறார். ஐந்தாம் வீட்டை குரு பார்ப்பதால் பிள்ளைகளின் செயலால் நிம்மதி உண்டாகும். மன திருப்தி ஏற்படும். ஜாதகத்தில் எவ்வளவு யோகம் இருந்தாலும் 5 ம் பாவமும் 5 ஆம் அதிபதியும் பலம் பெற வேண்டும். உங்களுக்கு பொறுப்புகள் கூடும் பதவிகள் தேடி வரும் கனவுகள் பூர்த்தியாகும். திருமணம் ஆகியும் நிண்ட காலமாக புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு சந்தான பிராப்தி கிட்டும். எது எல்லாம் விதிக்கப்பட்டுள்ளதோ அதை எல்லாம் அனுபவிப்பிர்கள். நன்மையான விசயங்களை மட்டும் அதிகமாக அனுபவிப்பீர்கள். மாணவர்கள் வெளியூர் வெளிநாடு சென்று கல்வி பயில நன்மை செய்வார்.

நோய்களில் இருந்து விடுதலை

ராசிக்கு ஏழாம் வீட்டை குரு பார்க்கிறார். களத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் இது வரை தடைப்பட்ட திருமணம் நடக்கும்.ஓரே நேரத்தில் பஞ்சம ஸ்தானம் களத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் சிலருக்கு ரத்த வழி சம்பந்தபட்ட உறவில் திருமணம் நடக்கும். சொந்த தொழில் கூட்டு தொழில் லாபம் தரும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இது வரை கஷ்டப்படுத்திக் கொண்டிருந்த முதுகுவலி. இடுப்புவலி, முட்டுவலி போன்ற நோய்கள் விலகும்.

திருமணம் கைகூடும்

ஏழாம் வீட்டை பார்ப்பதால் குருவினால் திருமணம் நிறைவேறும். காதலிப்பவர்கள் பலருக்கு திருமணத்தில் முடியும். தொழிலில் வெற்றி கிடைக்கும். கோவில் திருப்பணிகள், சமூக சேவைகளை செய்வீர்கள். குரு பெயர்ச்சியால் ஆதாயம் அதிகமாகும். இந்த குருப்பெயர்ச்சி கும்ப ராசிக்கு முன்னேற்றமும், வெற்றிகளும் தரக்கூடிய குரு பெயர்ச்சியாக இருக்கும். குலதெய்வ அனுகிரகம் கிடைக்கும். முருகப்பெருமானையும் தெட்சிணாமுர்த்தியையும் வணங்குவது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*