விருச்சிக ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019..!

குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இன்னும் சில மாதங்களில் பெயர்ச்சி அடையப்போகிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி குருப்பெயர்ச்சி அக்டோபர் 29ஆம் தேதியும், திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவம்பர் 5ஆம் தேதியும் நிகழ்கிறது. விருச்சிக குருவால் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார வளர்ச்சி, திருமணம், புத்திரபாக்கியம் வேண்டுவோர் இந்த குருப்பெயர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே அல்லல்பட்டு வரும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சியால் நன்மைகள் அதிகம் நிகழப்போகிறது. இரண்டாம் வீட்டில் அமரப்போகும் குருவினால் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம் முயற்சிகள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

விருச்சிக ராசிக்காரர்கள் ஏழரை சனியின் ஆதிக்கத்திலும் விரைய குரு, ஜென்மகுரு என பல ஆண்டுகாலமாகவே சிரமப்பட்டு வருகிறீர்கள். எப்படா விடிவுகாலம் பிறக்கும் நம்ம காலம் இப்படி கஷ்டத்துடனேயே கடந்து விடுமா என்று ஏக்கப்பெருமூச்சு விட்டுக்கொண்டிருப்பீர்கள். உங்களுக்கு நல்ல காலம் வந்து விட்டது. உங்கள் ராசியில் இருந்த குரு உங்களின் இரண்டாம் வீட்டிற்கு நகரப்போகிறார். இனி உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் வரப்போகிறது.

விருச்சிக ராசிக்காரர்கள் ஏழரை சனியின் ஆதிக்கத்திலும் விரைய குரு, ஜென்மகுரு என பல ஆண்டுகாலமாகவே சிரமப்பட்டு வருகிறீர்கள். எப்படா விடிவுகாலம் பிறக்கும் நம்ம காலம் இப்படி கஷ்டத்துடனேயே கடந்து விடுமா என்று ஏக்கப்பெருமூச்சு விட்டுக்கொண்டிருப்பீர்கள். உங்களுக்கு நல்ல காலம் வந்து விட்டது. உங்கள் ராசியில் இருந்த குரு உங்களின் இரண்டாம் வீட்டிற்கு நகரப்போகிறார். இனி உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் வரப்போகிறது.

குருவினால் உற்சாகம்

விருச்சிக ராசிக்குள் இருந்த குரு பகவான் தனது சொந்த வீடான தனுசு ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார். உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான தன ஸ்தானம், குடும்ப வாக்கு ஸ்தானத்திறகு குரு நகர்வது மிகச்சிறந்த மேன்மை. ஜென்ம குருவினாலும் ஏழரை சனியினாலும் அதிக பாதிப்பு ஏற்பட்டது. ஜென்ம குரு பல பாதிப்புகளை ஏற்படுத்தினார். இனி குருபகவான் மிகப்பெரிய மகிழ்ச்சி அலைகளை ஏற்படுத்துவார். குடும்ப ஸ்தானத்தில் உள்ள கேதுவை நோக்கி குரு செல்கிறார். குடும்ப வாழ்க்கையில் பிடிப்பு குறைந்து ஆன்மீகத்தின் மீதான நாட்டம் அதிகரிக்கும்.

விடிவுகாலம் பிறக்கும்

இந்த கால கட்டத்தில் இறைவழிபாட்டில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். கோவில் கோவிலாக செல்வீர்கள். உங்களுக்கு நல்ல தனவரவு வரும். பணமழை கொட்டப்போகிற கால கட்டம் இதுவாகும். நோய் நொடிகள் விலகும் கால கட்டமாகும். வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும். உங்களுக்கு இருந்த ஆபத்துக்கள் விலகும். கடனுதவி விலகும். வருமானம் அதிகமாகும். நிரந்தரமான வேலை கிடைக்கும். விட்டுக்கொடுத்து பேசுங்கள். கல்வி பயிலும் மாணவர்களுக்கு இருந்த தடைகள் விலகும். குடும்ப வாழ்க்கையில் வாக்குவாதம் இருந்தது அது விலகும்.

சூரியனை கண்ட பனிபோல பிரச்சினைகள் மறைந்து விடும். வாக்கு ஸ்தானத்தில் குரு வருவதால் குடும்பத்தில் வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை உயரும். செல்வ நிலை திருப்தி தரும்.

எதிரிகள் மறைவார்கள்

5ஆம் பார்வையாக ஆறாவது ஸ்தானத்தை குரு பார்க்கிறார். பல பிரச்சசினைகள் தீரும். சிலருக்கு நீண்ட காலமாக இருந்த கோர்ட் வம்பு வழக்குகள் சாதகமாகும். உங்களை எதிரி மாதிரி நினைத்தவர்கள் நண்பர்களாவார்கள். உங்களின் அன்பு ஆதரவை பலரும் எதிர்பார்த்து வருவார்கள். கடன் தொல்லைகள் தீரும்.

திருமணம் கைகூடி வரும்

குரு தனது ஏழாம்பார்வையாக உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டினை பார்க்கிறார். எட்டாம் வீட்டில் குரு பார்வை விழுவதால் கண்டங்கள் விலகும். அவமானங்கள் தீரும். பெண்களுக்கு மாங்கல்ய தோஷம் நீங்கும். தாலி பாக்கியத்தை கொடுப்பார். திருமணம் சுபகாரியம் புது முயற்சிகள் கைகூடும்.

புதிய வேலை கிடைக்கும்

குரு பகவான் தனது ஒன்பதாம் பார்வையாக உங்கள் ராசிக்கு 10 ஆம் வீட்டினை பார்வையிடுகிறார். புதிய வேலை கிடைக்கும். இதுநாள் வரை திருப்தியில்லாமல் வேறு வேலை செய்தவர்கள் இனிமேல் மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கும். கை நிறைய சம்பளமும் வரும். சிலர் வேலைக்காக வெளிநாட்டு பயணமும் செல்வீர்கள். புது தொழில்கள் துவங்க நல்ல காலம் இப்பொழுது பிறக்கிறது. இது வரை படித்து தகுதிகேற்ற வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். இதுநாள் வரை விஐபியாக இருந்தவர்கள் விவிஐபியாக உயர்வீர்கள். வியாழக்கிழமை தோறும் சிவனையும் குருவையும் தரிசிப்பது நல்லது. விருச்சிக ராசிக்காரர்கள் பிரதோச வழிபாடு செய்வது நல்லது. ராகவேந்திரர், ஸ்ரீரடி சாய்பாபாவை வணங்குவது நன்மை நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*