துலாம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019..!

குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இன்னும் சில மாதங்களில் பெயர்ச்சி அடையப்போகிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி குருப்பெயர்ச்சி அக்டோபர் 29ஆம் தேதியும், திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவம்பர் 5ஆம் தேதியும் நிகழ்கிறது. விருச்சிக குருவால் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார வளர்ச்சி, திருமணம், புத்திரபாக்கியம் வேண்டுவோர் இந்த குருப்பெயர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சியால் நன்மைகள் அதிகம் நிகழப்போகிறது. மூன்றாம் இடத்தில் அமரப்போகும் குருவினால் துலாம் ராசிக்கு கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம் முயற்சிகள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

‘தீதிலாதொரு முன்றிலே துரியோதனன் படைமாண்டதும்’ என்பது பழையபாடல். இது வரை இரண்டாம் பாவத்தில் சஞ்சரித்த குரு பகவான் நவம்பர் மாதம் முதல் முன்றாம் பாவமான தைரியம் சகோதரம் வீரம் எழுத்தறிவு விளையாட்டு துறை என்று சொல்லப்படும் பாவகத்துக்கு மாறுகிறார் ஏற்கனவே இருந்த இடம் நல்ல இடம் தான்.

குரு பகவான் உங்கள் ராசிக்கு மூன்றாம் அதிபதி ஆறாம் அதிபதி. இப்பொழுது மூன்றாம் அதிபதி தனது வீட்டில் ஆட்சி பெற்று அமர்வது சிறப்பான யோகம். குரு அமர்ந்து இருக்கும் இடத்தை விட அவரது பார்க்கும் இடங்களான களத்திர ஸ்தானம், பாக்ய ஸ்தானம், லாபஸ்தானம் போன்றவை பிரகாசிக்கப்போகிறது.

குரு பெயர்ச்சியால் நன்மை

இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தி தரப்போகிறது. வாழ்க்கையில் பட்ட சிரமங்கள் விலகி சுபிட்சம் நடைபெறப்போகிறது. தைரிய, வீரிய ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பது நன்மை நடக்கிறது. இனி குரு பெயர்ச்சியால் அதிக நன்மைகள் நடைபெறப் போகிறது. 3 ஆறாம் அதிபதி 3ல் சென்று அமரப்போகிறார். உங்களின் ஆறாம் அதிபதியும் அவர்தான்.

திருமண முயற்சியில் வெற்றி

உங்கள் ஏழாம் வீட்டையும் பாக்ய ஸ்தானம், லாப ஸ்தானத்தை பார்க்கிறார். கேதுவை நோக்கி குரு செல்கிறார். துலாம் ராசிக்கு 9ல் ராகு மூன்றில் கேது சஞ்சரிக்கின்றனர். மூன்றாம் வீட்டில் அமர்ந்து ஏழாம் பார்வையாக ராகுவை பார்க்கிறார். திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். சிலருக்கு இரண்டாவது திருமணம் அமையும். திருமணம் ஆகி கோர்ட்டு வம்பு வழக்கில் இருந்தவர்கள் ஓன்று சேருவார்கள். சிலருக்கு மறுவாழ்க்கை அமையும். சொந்த பந்தங்கள் பங்காளிகள் இணைவார்கள்.

மாணவர்களுக்கு குரு அருள்

மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் அமையும். சரியான வழிகாட்டிகள் கிடைப்பார்கள். நல்ல குருவின் ஆசி கிடைக்கும். வெளிநாடுகளில் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களில் படிக்க இடம் கிடைக்கும். வெளிநாடு செல்ல நினைக்கும் மருத்துவ மாணவர்ர்களுக்கு படிக்க இடம் கிடைக்கும். குரு பெயர்ச்சியால் அப்பாவிற்கு யோகம் கிடைக்கும். அப்பா மகன் உறவு மிகச்சிறப்பாக இருக்கும். பல பிரச்சினைகள் விலகி உறவுகளில் இனிமை இருக்கும். உங்களின் வாழ்க்கைக்கு தேவையான பாக்கியம் கிடைக்கும். கனவு நனவாகப் போகிறது.

வெளிநாட்டு பயணம் வெற்றி

நெருங்கிய நண்பர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் கிடைக்கும். வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு பிரச்சினைகள் தீரும். ஐடி துறைகளில் கம்யூனிகேசன் துறைகளில் நன்மை நடைபெறும். இளைய சகோதரர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். இது பாக்கியமான காலகட்டம். பொருளாதார செழிப்பு ஏற்படும். நீண்ட தொலைவு பயணம் ஏற்படும். தந்தை வழி சொத்துக்கள் வில்லங்கம் இருந்தாலும் விலகும். வெற்றிகளை அள்ளித்தரப்போகிறது. பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்

முயற்சிகளில் வெற்றி

வேலை விசயத்தில் பிரச்சினை உள்ளவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் இது நாள் வரை கோயில் குளம் சுற்றி உங்கள் கோரிக்கைகளை வைத்து அதில் ஏமாற்றம் அடைந்த உங்களுக்கு நீண்ட நாட்களாக நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த பதவி பட்டங்கள் பூர்வீக சொத்து பரிமாற்றம் புது முயற்சிகள் கைகூடும்

தொழில் முன்னேற்றம்

லாப ஸ்தானத்தை குரு பார்க்கப் போவதால் பொருளாதார நிலை திருப்தி தரும்.சிலர் பண கொடுக்கல் வாங்கலில் சிக்கியிருந்தால் அந்த பிரச்சனைகள் முடிவு பெற்று தனவரவு ஆதாயம் கிடைக்கும்.தொழில் வளர்ச்சி மாற்றம் முன்னேற்றத்தை தரும். நோய் நொடி தொந்தரவுகள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். தீராத நோய்கள் நீங்கி மன நிம்மதி அடைவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். மகிழ்ச்சி பொங்கும். புனித யாத்திரை பயணம் செல்வீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*