கன்னி ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019!

குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இன்னும் சில மாதங்களில் பெயர்ச்சி அடையப்போகிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி குருப்பெயர்ச்சி அக்டோபர் 29ஆம் தேதியும், திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவம்பர் 5ஆம் தேதியும் நிகழ்கிறது. விருச்சிக குருவால் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார வளர்ச்சி, திருமணம், புத்திரபாக்கியம் வேண்டுவோர் இந்த குருப்பெயர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். கன்னி ராசிக்காரர்களுக்கு சுகஸ்தானமான நான்காம் வீட்டில் குரு சஞ்சரிக்கும் காலத்தில் பிரச்சினைகள் நீங்கி நன்மைகள் அதிகம் நடைபெறப்போகிறது. இந்த குருப்பெயர்ச்சியால் உங்களுக்கு வேலை வாய்ப்பு, திருமணம், கல்வி, தொழில் வியாபார லாபம் எப்படி என்று பார்க்கலாம்.

‘தர்மபுத்திரர் நாலிலே வனவாசம் போனது’ என்பது பாடல் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டிற்கு வரும் குரு பகவான் 8, 10, 12, ஆகிய ஸ்தானங்களை பார்க்கிறார் கேந்திரத்தில் குரு ஹம்சயோகம் பெற்று அமரப்போகிறார். நான்குக்கு அதிபன் நான்காம் இடத்தில் ஆட்சி. குரு நான்கில் அமரும் போது மனதிற்கு தேவையானவை நடக்கும்.

கேந்திரத்தில் சுபகிரகம் வரும் கேந்திராதிபதி தோஷத்தை தானே தர வேண்டும் சந்தேகம் வரலாம். 4 ஆம் பாவம் மட்டுமே ஸ்தான பலம் இழக்கும். அதாவது வண்டி வாகன விரைய செலவுகள். சிலருக்கு சொந்த வீடு சொகுசா இருந்தாலும் பணி நிமித்தம் காரணமாக வாடகை வீட்டிற்க்கு போவது இது தான் பாதக பலன்.

மன ஆறுதல் தரும் குரு பெயர்ச்சி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி ஆறுதலும் மகிழ்ச்சியும் கிடைக்கும். எதைத் தொட்டாலும் தடையாக இருந்தது. இனி நன்மைகள் நடைபெறும். பூர்வீக ஊரில் வாழ முடியாமல் இருந்தது. சகோதர உறவில் சிக்கல், கணவன் மனைவி உறவில் கருத்து மாறுபாடு என பல சங்கடங்கள் இருந்தன. இனி இந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நல்ல காலம் அக்டோபர் மாதம் முதல் வரப்போகிறது. சனி கேதுவினால் நான்காம் வீட்டில் இருக்கும் அர்த்தாஷ்டம சனியின் வேகத்தை குரு பகவான் குறைப்பார்.

யோக காலம் வருகிறது

நான்காம் வீட்டில் குரு அமரப்போகிறார். 3ஆம் வீட்டில் இருந்து நான்காம் வீட்டிற்கு குரு நகரும் காலத்தில் பல நன்மைகள் நடைபெறும். வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும். தொழில் ரீதியான பிரச்சினைகள் தீரும். தொழில் செய்ய இடம் கிடைக்கும். கவலைகள் நீங்கும் காலம். நிரந்தரமான நன்மைகள் நடைபெறும். சொத்து சுகம் வாங்குவீர்கள், வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். வண்டி வாகனம் வாங்குவீர்கள். அதற்கான யோகம் கைகூடி வருகிறது.

அன்பும் ஆதரவும்

குருபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு எட்டாம் இடமான மேஷ ராசியை பார்வையிடுகிறார். எட்டாம் பாவத்தை குரு பார்ப்பதால் இதுநாள் வரை உங்களை அவமரியாதை செய்தவர்கள் உங்களை தேடி வந்து மன்னிப்பு கேட்கும் காலம் வருகிறது. உங்களிடம் பணமோசடி செய்தவர்கள் எல்லாம் உங்களை நாடி வரும் காலம் வருகிறது. பாதகாதிபதி கேந்திரத்தில் வரும் பொழுது மாற்றங்களையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்துவார். 8ஆம் வீட்டில் படும் சுப கிரகப் பார்வையால் சங்கடங்கள் தீரும் நோய்களில் நிவர்த்தி கிடைக்கும். புத்துயிர் கிடைக்கும்.

வெளிநாட்டு கல்வி யோகம்

எட்டாம் வீடு சுபம் பெறும் சங்கடங்கள் மறையும். புது நண்பர்கள் ஆதரவு அனுகூலம் ஆதாயம் கிடைக்கும். மனைவி வகையில் மருத்துவ செலவுகள் வரலாம். திருமண தடைகள் விலகும். பெண்களுக்கு இருந்த மாங்கல்ய தோஷம் விலகி கணவரின் ஆயுள் அதிகரிக்கும். வெளிநாட்டு யோகம், மாணவர்களுக்கு வெளிநாட்டு கல்வி யோகம் வரும்.

வியாபாரத்தில் வெற்றி

பத்தாம் வீட்டை அந்த பாவாதிபதி குருவே பத்தாம் பாவத்தை பார்ப்பதால் இது வரை நலிவுற்ற தொழில் வளர்ச்சி அடையும். இதுவரை முடங்கிக் கிடந்த லாபம் எல்லாம் வரும். உத்யோகத்தில் பதவி உயர்வினால் முன்னேற்றம் ஏற்படும். வெளிநாட்டு வேலை கிடைக்கலாம். ஜீவன ஸ்தானத்தை குரு பார்ப்பதால் வெளிநாட்டு வேலை கிடைக்கும். நிரந்தரமான வேலை கிடைக்கும் காலமாகும். சிலருக்கு வேலையில் இடமாற்றம் ஏற்படும். வேலையே இல்லையே என்று நினைத்தவர்களுக்கு புது வேலை கிடைக்கும், சிலருக்கு வேலையில் புரமோசன் கிடைக்கும், நினைத்த இடத்திற்கு இடமாற்றம் நடைபெறும்.

வண்டி வாகனம் வாங்கும் யோகம்

12ஆம் வீட்டை ஒன்பதாம் பார்வையாக குரு பார்க்கிறார். விரைய ஸ்தானமான சிம்மத்தில் குரு பார்வை வெளிநாட்டு பயணம் சுபமாக அமையும் ஆதாயம் கிடைக்கும். முன்னேற்றம் வேகமாகும். இதுவரை தூக்கம் இல்லாமல் நிம்மதியை இழந்து தவித்தீர்கள். பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பயணங்களால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும். இதுவரை தடைப்பட்ட சுபகாரியம் எல்லாம் இனிதே நடக்கும். நட்பு வட்டம் விரிவடையும். இழப்பில் இருந்து மீண்டு வருவீர்கள். சுப விரையங்கள் ஏற்படும். வீடு மாறலாம். புதிய வண்டி வாகனம் அமையும்.

நலம் தரும் ஏழுமலையான்

தூக்க பிரச்சினைகள் தீரும். நன்றாக சாப்பிட்டு நன்றாக உறங்குவீர்கள். படிக்கும் மாணவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். இந்த குரு பெயர்ச்சியினால் இன்பத்தில் துன்பம்,துன்பத்தில் இன்பம் மாறி மாறி வரும் அம்மாவின் உடல் நலத்தில் இருந்த குறைகள் விலகும். திருப்பதி ஏழுமலையானை தினசரி வணங்கவும். திருஷ்டிகள் போகும். கண்டங்கள் விலகும் கால கட்டமாகும். நவகிரக சன்னதியில் உள்ள குருவுக்கு வியாழக்கிழமை அர்ச்சனை செய்யவும். பெருமாள் வழிபாடு புதன்கிழமை செய்வது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*