குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இன்னும் சில மாதங்களில் பெயர்ச்சி அடையப்போகிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி குருப்பெயர்ச்சி அக்டோபர் 29ஆம் தேதியும், திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவம்பர் 5ஆம் தேதியும் நிகழ்கிறது. விருச்சிக குருவால் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார வளர்ச்சி, திருமணம், புத்திரபாக்கியம் வேண்டுவோர் இந்த குருப்பெயர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். கடக ராசிக்காரர்களுக்கு ஆறாம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் அமரப்போகும் குருவினால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்று பார்க்கலாம்.
அடிமைத்தொழில், தாய்மாமன், நோய், கடன் எதிரி ஆகியவற்றை குறிக்கும் பாவத்திற்க்கு குரு வருகிறார். சுபகிரகம் ஆறில் வந்தால் அசுப பலன்கள் குறையும் என்பது ஜோதிட விதி. ஆறில் குரு ஊரேல்லாம் பகை என்பது பழமொழி. கடக ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி நல்ல வளர்ச்சியை தரக்கூடியதாக இருக்கும். ஏனென்றால் கடகத்தில் குரு உச்சமடைபவர். கடகத்திற்கு குரு நன்மையை அள்ளித்தருபவர்.
5ஆம் வீட்டில் இருந்து ருண ரோக ஸ்தானம் என்னும் ஆறாம் வீட்டிற்கு வருவதால் அவருடைய பார்வை தொழில் ஸ்தானமான 10ஆம் வீடு, அயன ஸ்தயன ஸ்தானமான 12ஆம் வீடு, 2ஆம் வீடான தன வாக்கு குடும்ப ஸ்தானத்தின் மீது விழுகிறது. குரு பார்க்கும் இடங்கள் பளிச்சிடும். ஆறாம் வீட்டில் சனி கேது இருக்கின்றனர். கூடவே குரு போய் அமர்கிறார். எதிரிகள் அடையாளம் தெரிந்தும் நல்ல காலம் தொடங்கிவிட்டது.
நோயை அடையாளம் காட்டும் குரு
கடன் நோய் எதிரி ஸ்தானத்தில் குரு அமர்வதால் கடன் வாங்க வைக்கும் உடம்பில் உள்ள நோய்களை சுட்டிக்காட்டும். நிவர்த்தி கிடைக்கும் நன்மையே நடைபெறும். கடன் மூலம் சொத்து சேர்க்கலாம் 9ஆம் அதிபதி உங்களுக்கு கடன் மூலம் ஆசைகளை நிறைவேறுவார். உடம்பில் இருந்த ரோகங்கள் வெளியே தெரியவருவதால் இத்தனை நாட்களாக உங்களை வாட்டிக்கொண்டிருந்த வியாதியை இனம் காண்பீர்கள். நோய்கள் தீரும் காலம்.
கடன் உதவி கிடைக்கும்
தொழில் வளர்ச்சிக்கு கடன் உதவி கிடைக்கும். எதிரிகள் இருந்தும் நன்மைகள் நடைபெறும். அப்பாவின் உடல் நலனின் அக்கறை தேவை. அளவிற்கு மீறி கடன் வாங்க வேண்டாம். நோய்களை பயப்பட வேண்டாம். எதையும் எதிர்த்து போராடி வெல்வீர்கள். ஆறுக்குடைய குரு ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் உங்களுக்க விபரீத ராஜயோகம் வந்திருக்கிறது.
வேலை கிடைக்கும்
மேஷம் ராசி உங்களுக்கு தொழில் ஸ்தானம். உங்க 10வது வீட்டின் மீது விழுவதால் போட்டி தேர்வில் வெற்றி பெறுவீர்கள். நல்ல வேலை கிடைக்க வைக்கும். அவர் பார்வை தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் தொழிலில் மாற்றம் முன்னேற்றம் அன்னிய தேச பயணங்கள் வரலாம். இது வரை படித்து வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.
கடன் தீர்க்க வருமானம்
குரு பார்வை உங்கள் ராசிக்கு 2ஆம் வீடான சிம்மத்தின் மீது குரு பார்வை விழுவதால் வருமானம் அதிகரிக்கும். கடன்களை தீர்க்க வருமானம் அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றத்தை அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கருத்து வேறுபாட்டால் பிரிந்த தம்பதியினர் ஓன்று சேருவார்கள். சிலருக்கு கோர்ட் வரை சென்ற வழக்குகள் சாதகமாகும். வாக்கு நாணயத்தை காப்பாற்றி விடலாம். குடும்ப தேவைக்காக புதிய பொருட்கள் வாங்குவீர்கள். குரு உங்க ஆசைகளை நிறைவேற்ற கடன் மூலம் பணத்தை தருவார். பிள்ளைகள் படிப்பு செலவுக்கு கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். இந்த கால கட்டத்தில் அளவாக கடன் வாங்குங்கள்.