மிதுன ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019..!

குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இன்னும் சில மாதங்களில் பெயர்ச்சி அடையப்போகிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி குருப்பெயர்ச்சி அக்டோபர் 29ஆம் தேதியும், திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவம்பர் 5ஆம் தேதியும் நிகழ்கிறது. விருச்சிக குருவால் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார வளர்ச்சி, திருமணம், புத்திரபாக்கியம் வேண்டுவோர் இந்த குருப்பெயர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். மிதுனம் ராசிக்காரர்களுக்கு ஆறாம் இடத்து குருவினால் பல அல்லல்கள் ஏற்பட்டது. இப்போது களத்திர ஸ்தானத்தில் அமரப்போகும் குருவினால் பல அற்புதங்கள் நிகழப்போகிறது.

ஏழாம் பாவமான திருமணம், கூட்டு தொழில், வாழ்க்கை துணை, வெளிநாட்டு வாழ்க்கை, காதல் ஆகிய காரகங்களைக் குறிப்பிடும் ஸ்தானத்தில் இருந்து உங்கள் ராசியை பார்க்கிறார். கண்டக சனி கஷ்டம் ஒரு பக்கம், ஆறாம் இடத்து குரு பாதிப்பு மறுபக்கம் என சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்று பாடிக்கொண்டிருக்கிறீர்கள். இனி கஷ்டங்களுக்கு விடிவு காலம் பிறக்கப் போகிறது.

ஆறாம் இடத்து குருவினால் உழைப்பாளிகளுக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் இருந்தது. கடன் பெருகியது. எதிரிகள் தொந்தரவு ஏற்பட்டது. வேலை செய்யும் இடத்தில் பதவி இடமாற்றம் ஏற்பட்டது உடல் நலக்குறைவு ஏற்பட்டது. நவம்பரில் நிகழப்போகும் குருப்பெயர்ச்சி அற்புதமாக இருக்கப்போகிறது. ஏழாம் வீட்டில் குரு அமர்ந்து தனது பொன்னான பார்வையால் உங்களுக்கு பல நன்மைகளை தரப்போகிறார். மிதுனம் ராசிக்காரர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, திருமணம் போன்றவை அடுத்த ஓராண்டிற்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

நன்மைகள் நடைபெறும்

ஒளிமயமான எதிர்காலம் அமையப்போகிறது. மிதுன ராசிக்காரர்களுக்கு குரு கெடுதல் செய்ய மாட்டார் நன்மைதான் செய்வார். கேதுவை நோக்கி குரு நெருங்குவதால் வீடு, அலுவலகத்தில் நன்மைகள் நடைபெறும். சூழ்நிலைகள் மாறப்போகிறது. ஏழாம் வீட்டில் சனி கேது கிரகங்களினால் தினந்தோறும் சண்டைதான். குரு ஏழாம் வீட்டிற்கு வந்து சனியும் கேதுவும் இணையப்போகும் காலம் இதுவாகும். கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கப்போகிறது.

தம்பதியடையே ரொமான்ஸ் அதிகரிக்கும். தம்பதியர் இடையே பேச்சில் கவனம் தேவை இல்லாவிட்டால் தவறாக புரிந்து கொள்ளப்படுவார்கள். பிரச்சினைகள் உருவாக வாய்ப்பு உள்ளது.

வெளிநாடு வேலை வாய்ப்பு

உங்கள் ராசிக்கு ஏழு, பத்தாம் அதிபதி குரு ஏழாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்த குருப்பெயர்ச்சியினால் பொன்னான கால கட்டம் வரப்போகிறது. வெளிநாடு வேலை வாய்ப்பு வரப்போகிறது. தொழிலில் முன்னேற்றம் அமையும்.வெளிநாடு தொடர்புடைய வேலைகள் அமையும். சொத்து வசதி வாய்ப்பு பெருக்கும். உடன்பிறப்பால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும்.

குரு பார்வையால் நன்மை

பொதுவாக ராசி லக்னத்தை குரு பார்த்தால் தேகபலம்,மனோபலம் பணபலம் ஆகிய முன்றும் கிடைக்கும். உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானத்தை குரு பார்ப்பதால் பொருளாதார நிலையில் இருந்த முட்டுகட்டைகள் அகலும். வரவேண்டிய பாக்கிகள் வரும் கடன்கள் அடைப்படும். சேமிப்புகள் சேரும் மொத்தத்தில் 80 சதவிதம் நன்மைகள் நடக்கும்

யோகமான கால கட்டம்

குரு உங்களின் லாப ஸ்தானத்தை பார்ப்பதால் மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும் தன லாபம் கிடைக்கும். உறவுகள் ஒற்றுமை கூடும்.

மிதுனத்தை குரு பார்ப்பதால் கேந்திர ஸ்தானத்தில் ஆட்சி பெறும் போது ஹம்ச யோகம் கிடைக்கும். குருவின் பார்வை உங்கள் ராசி மீது விழுவதால் அன்பும் பிள்ளைகளின் அரவணைப்பு கிடைக்கும். விஐபிக்களின் அரவணைப்பு கிடைக்கும்.

யோக கால கட்டம்

குருவினால் மாணவர்களின் திறமைகள் பளிச்சிடும். உயர்வுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு மிகச்சிறந்த மேன்மைகள் கிடைக்கும். மாணவர்களுக்கு நல்ல யோகமான கால கட்டம் வரப்போகிறது. கல்வியில் ஞாபக சக்தி அதிகரிக்கும். குரு பாதகாதிபதியாக இருந்தாலும் விழிப்புணர்வோடு இருந்தால் பிரச்சினைகள் இல்லை.

செல்வம் செல்வாக்கு கூடும்

10த்துக்கு பத்தாம் வீட்டில் குரு பார்வை படுவதால் ஹம்ச யோகம் அமைகிறது. புதிய வேலைகளால் நன்மை. திடீர் மாற்றம் அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். ராசிக்கு மூன்றாம் வீடான சிம்மத்தின் குரு பார்வை வருமானத்தை அதிகரிக்கச் செய்யும். தைரியம் கூடும். மூன்றாம் வீட்டில் குரு பார்வை படுவதால் சகோதரர்கள் மூலம் உதவி கிடைக்கும். இளைய சகோதரர்களால் நன்மையே நடைபெறும். லாபங்கள் நிறைந்த ஆண்டாக அமையும். செய்யும் தொழிலில் வருமானம் கூடும். செல்வம் செல்வாக்கு கூடும். சாதனை புரிய வைக்கும். கலைத்துறையில் உள்ளவர்களை ஜொலிக்க வைக்கும். குரு மந்திரத்தை தினமும் 12 முறை சொல்லுங்கள் நன்மைகள் அதிகம் நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*