ரிஷப ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019..!

குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இன்னும் சில மாதங்களில் பெயர்ச்சி அடையப்போகிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி குருப்பெயர்ச்சி அக்டோபர் 29ஆம் தேதியும், திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவம்பர் 5ஆம் தேதியும் நிகழ்கிறது. விருச்சிக குருவால் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார வளர்ச்சி, திருமணம், புத்திரபாக்கியம் வேண்டுவோர் இந்த குருப்பெயர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ரிஷபம் ராசிக்காரர்கள் அஷ்டமத்து சனியால் இதுநாள்வரை பல சங்கடங்களை அனுபவித்து வருகிறீர்கள். உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் சனி கேது உடன் இணைப்போகும் குருபகவானால் உங்கள் கஷ்டங்களுக்கு விடிவுகாலம் பிறக்கப் போகிறது.

குரு பொன்னவன். சுபமானவர் குரு தனுசு ராசியை எட்டும் காலம் நன்மைகள் நடைபெறும். குருபகவான் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். குரு உங்க அஷ்டமாதிபதி. தனது வீட்டில் வலுவான நிலையில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். எட்டில் குரு என்ன செய்யப்போகிறாரோ என்ற கவலை வேண்டாம். ”வாலி பட்டமிழந்து போம்படி ஆனதும்…” என்றொரு ஜோதிடமொழி உண்டு. எட்டில் குரு இருந்தால் நல்லதும், கெட்டதும் மாறிமாறி வந்துபோகும்.

ஒரு சொத்தை விற்று வேறொன்றை வாங்க வைக்கும். ஒரு இழப்பை கொடுத்து வேறொரு ஏற்றத்தை அளிக்கும். சமூகத்தில் கௌரவமாக உள்ளவர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். இல்லையெனில், கௌரவப் பதவிகளுக்கு ஆபத்து வரும். அதனால் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை வீட்டிற்கு அழைத்து வரக்கூடாது.

விபரீத ராஜயோகம்

சுக்கிரன் உங்க ராசி அதிபதி அவர் அசுர குரு அவருக்கு எதிரிதான் குருபகவான் தேவ குரு. ஏழாம் வீட்டில் இருந்து எட்டாம் வீட்டிற்கு நகர்கிறார். உங்க ராசிக்கு 8 மற்றும் 11ஆம் அதிபதி அவரே. அவர் ஆட்சி பெற்று அமரும் போல பல நன்மைகள் ரிஷபத்திற்கு நடைபெறப்போகிறது. ரிஷபம் குரு எட்டாம் வீட்டில் போகிறார். அஷ்டமாதிபதி அஷ்டம ஸ்தானத்தை அடைகிறார். ரிஷபத்தை விபரீத ராஜயோகம் கிடைக்கும். சனி கேது கூடவே இருந்தாலும் குரு பகவானால் நன்மைகள் நடைபெறும். ‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ என்பது போல உங்களுக்கு கெடுதல் செய்யக்கூடிய குரு கெட்ட ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கு போவதால் விபரீத ராஜயோகமாக நிறைய பிளஸ் நடக்கும்.

பணவரவு அதிகரிக்கும்

குருபகவான் 7ஆம் வீட்டில் இருந்து எட்டாம் வீட்டுக்கு குரு நகர்வதால் கவலை வேண்டாம். நன்மை தருவார். தன் வீட்டில் ஆட்சி பெறுகிறார். அந்தனன் தணித்து நின்றால் அவதி. சனி கேது உடன் இணைகிறார். லாபாதிபதி, அஷ்டமாதிபதி அவர்தான். கவலை வேண்டாம். அஷ்டமத்து சனியின் பிடியில் இருக்கும் உங்களை விடுவிக்கவே குரு அங்கே போய் அமர்கிறார். பணமழை உங்க வீட்டில் கொட்டப்போகிறது. இதுநாள் வரை குடும்பத்திலும் வேலை செய்யும் இடத்திலும் நிறைய சிக்கல்கள் பிரச்சினைகளை சந்தித்து வந்தீர்கள் தீரப்போகும் காலம் வந்து விட்டது.

குடும்பம் குதூகலமாகும்

குரு உங்க ராசிக்கு விரைய ஸ்தானம், குடும்ப ஸ்தானம், சுக ஸ்தானங்களை பார்வையிடுகிறார். ராசிக்கு 2ஆம் வீட்டை குரு பார்வையிடுவதால் வருமானத்திற்கு குறைவிருக்காது. உங்கள் ராசிக்கு 2ஆம் வீட்டில் ராகு இருக்கிறார், அந்த வீட்டை குரு பார்ப்பதால் சுபத்தோடு வருமானம் அதிகரிக்கும். பொருளதார வளர்ச்சியை தருவார் காரணம் 2ஆம் வீட்டை பார்க்கிறார். ஆனந்தத்தை அள்ளித்தரப்போகிறார். கணவன் மனைவி பிரச்சினை தீரும். வாழ்க்கையில் இதுநாள் வரை இருந்த கசப்பான அனுபவங்கள் நீங்கும்.

வண்டி வாகனம் வீடு வாங்கும் யோகம்

4ஆம் வீட்டில் குரு பார்க்கும் போது கடன் அதிகம் கிடைக்கும் வீடு வண்டி வாகனம் வாங்கலாம். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு கூடும். நன்றாக சாப்பிடுவீர்கள். இதுநாள் வரை சாப்பிடக்கூட முடியாமல் தவித்தவர்கள் வீடு வாங்கப்போகும் யோகம் வரப்போகிறது. கல்வியில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். அம்மாவின் உடல் நலனில் பூரண நலம் பிறக்கும். புரமோசன் வரக்கூடிய சூழ்நிலையும் உண்டு. பிசினஸ் அதிக பொருட்களை ஸ்டாக் வாங்க வேண்டாம். பண பரிவர்த்தனை கவனம் தேவை. உடல் நலனில் கூடுதல் கவனம் தேவை.

கடன்கள் கிடைக்கும்

12ஆம் வீடான மேஷத்தின் மீது குரு பார்வை விழுவதால் நிறைய பொருட்கள் வாங்குவீர்கள். கடன் நிறைய வாங்குவீர்கள். பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். வேலைப்பளு அதிகரிக்கும். உடல் சோர்வு ஏற்படும். சுப செலவுகள் ஏற்படும். தினம் தினம் கஷ்டத்தோடு இருந்த நீங்க இனி கவலைப்பட வேண்டாம். குரு பகவான் உங்களுக்கு நன்மை செய்வார். சனி உங்க ராசிக்கு 8ல் அமர்ந்து வேலையை கெடுத்து வந்தார். எட்டாம் வீட்டில் குரு அமரும் போது பிரச்சினைகள் தீர்ந்து நன்மைகள் நடைபெறும். குரு பகவான் இடமாற்றத்தை தருவார். அது நன்மை தரும் மாற்றமாக இருக்கும். மொத்தத்தில் எட்டாம் வீட்டிற்கு தேவகுரு நகர்வதால் எல்லா வகையிலும் நன்மைகள்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*