கமல் மறுத்தார் அஜித் நடித்தார் படம் மெகாஹிட்- எந்த படம் தெரியுமா!

0
1896

கமல் மறுத்தார் அஜித் நடித்தார் படம் மெகாஹிட்- எந்த படம் தெரியுமா
தமிழ் சினிமாவில் பன்முக கலைஞனாக வலம் வருபவர் நடிகர் கமலஹாசன் அவர்கள். இயக்குநராகவும், நடிகராகவும் பல வித்தியாசமான படைப்புகளை தமிழ் ரசிகர்களுக்கு அளித்தவர். தமது படங்களில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகபடுத்துவதிலும், பயன்படுத்துவதிலும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு முன்னோடியாக திகழ்பவர் இவரே.

மேலும் செவாலியே சிவாஜி அவர்களுக்கு அடுத்தபடியாக நடிப்பில் தனி முத்திரை படைத்த இவர் பல வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். அந்த வகையில் கே.எஸ்.ரவிகுமார் அவர்களின் இயக்கத்தில் இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் அவ்வை சண்முகி, தசாவதாராம் ஆகிய படங்கள் இன்றளவும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவை.

இந்நிலையில் கே.எஸ்.ரவிகுமார் அவர்கள் தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களான ரஜினி, கமல், கார்த்திக், பிரபு, அர்ஜூன், சரத்குமார், அஜித் ஆகியோரை வைத்து பல மெகாஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். ஆனால் தளபதி விஜய் அவர்களை வைத்து இயக்கிய மின்சார கண்ணா படம் மட்டும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

அந்த வகையில் கே.எஸ்.ரவிகுமார், அஜித் கூட்டனியில் வில்லன், வரலாறு என இரண்டு மெகாஹிட் படங்கள் வெளிவந்துள்ளது. அந்த வரிசையில் 2006-ம் ஆண்டு கே.எஸ்.ரவிகுமார் அவர்களின் இயக்கத்தில் தல அஜித் நடித்து வெளிவந்த படம் வரலாறு. தல அஜித் அவர்கள் மூன்று வேடங்களில் நடித்திருந்தார்.

இப்படத்தில் அஜித் அவர்களுக்கு ஜோடியாக அசின் நடிக்க இவர்களுடன் கனிகா, சுஜாதா, விஜயன், சந்தானபாரதி உட்பட பலர் நடித்திருந்தனர். படத்தில் மூன்று கதாபாத்திரங்ளில் தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தார் தல அஜித் அவர்கள்.

இந்நிலையில் தசாவதாரம் படத்திற்கு பிறகு கமலை வைத்து இயக்க விரும்பிய ரவிகுமார் வரலாறு படத்தின் கதையை முதலில் கூறியது கமல் அவர்களிடம்தானாம். ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் இது போன்ற கதை தமக்கு சரிவராது என கூறி இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம் கமல் அவர்கள். இதன் பின்னரே இந்த வாய்ப்பு தல அஜித் அவர்களுக்கு சென்றது என்பது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here