பிக் பாஸ் வீட்டிலிருந்து கடந்தவாரம் பாத்திமா பாபு வெளியேறினார், இந்நிலையில் நேற்று மோகன் வைத்தியா வெளியேறுகிறார் என்று சிறிது நேரம் வீட்டில் இருந்த அனைவரையும் கதிகலங்க வைத்துவிட்டு பின் அது பொய் என்று அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார் கமலஹாசன்.
இந்நிலையில் இந்த வாரம் வீட்டிலிருந்து யார் வெளியேற்றப்படுகிறார் என்ற செய்தி கசிந்துள்ளது. வீட்டில் அனைவரின் எதிர்ப்பையும் சம்பாதித்து வந்த வனிதா தான் இந்த வாரம் வெளியேறுகிறார்.