உண்ட உணவு செரித்து, பசி எடுக்குமேயானால் சீரண மண்டலம் நல்ல நிலைமையில் உள்ளது என அர்த்தம். வயிறு மட்டுமே செரிமான மண்டலத்தின் பிரதான உறுப்பு கிடையாது, கல்லீரல் (Liver)-உம் உணவைச் செரிமானம் செய்வதில் உதவுகிறது, குறிப்பாக கொழுப்பைச் செரிமானம் செய்யத் தேவையான பித்தநீரை உற்பத்தி செய்யும் வேலையை ஏற்றுள்ளது. இதுமட்டுமல்லாது, இரத்த பிளாஸ்மாக்களுக்குத் தேவையான சிலவகை புரதங்களை உற்பத்தி செய்தல், தேவையானபோது உடலுக்குத் தேவையான க்ளுக்கோஸை சேமித்து வெளியிடுவது, இரத்தத்தில் உள்ள நச்சுக்களைச் சுத்திகரிப்பது, உடலின் நோய் எதிர்ப்புசக்திக்கு உதவுவது என ஆரோக்கியத்துக்கு துணை நலம் புரியும் மிக முக்கிய உறுப்பாக இருப்பது இந்தக் கல்லீரல்!
கல்லீரலில் ஏற்படும் பிரச்னைகள்
கல்லீரலுக்கு முதல் எதிரி குடிப்பழக்கம் என்பது நாம் அறிந்ததே! அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை மிகுதியாய் உண்பது, இரவில் வயிறு முட்ட உண்பது, கசடு படிந்த அலல்து உபயோகித்த சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவது போன்ற காரணங்களால் கல்லீரல் வீக்கம் அடைவது, மஞ்சள் காமாலை நோய் அல்லது கல்லீரல் செயலிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஒவ்வொரு வருடமும் கல்லீரல் நோயால் பத்து லட்சம் இந்தியர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஐந்தில் ஒரு இந்தியருக்கு கல்லீரல் நோய் இருக்கவும் வாய்ப்புள்ளதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், எந்தத் தவறும் செய்யாத பிஞ்சுக் குழந்தைகளுக்கும் சில சமயம் கல்லீரல் நோய் ஏற்படுகிறது. சென்னையைச் சேர்ந்த 4 வயது குழந்தை சபரீஷுக்கும் இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அரியவகை மரபு நோய்
சபரீஷுக்கு ஒரு வயது இருக்கும்போது மஞ்சள் காமாலை நோய் ஏற்பட, அவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் PFIC எனும் அரியவகை மரபியல் நோய்த் தாக்கியுள்ளதாக பெற்றோரிடம் தெரிவித்தனர். லட்சம் பேரில் ஒருவரை மட்டுமே தாக்கக்கூடிய மிக அரியவகை நோய் இந்த PFIC. இப்போது சபரீஷுக்கு 4 வயது ஆகிவிட்டது, இதுவரை தொடர்ந்து சிகிச்சை எடுத்துவந்திருந்தாலும், இப்போது குழந்தை இக்கட்டான சூழ்நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இப்போதே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே சிறுவனைக் காப்பாற்ற முடியும்.
அதிர்ஷ்டவசமாக சபரீஷின் அம்மா செல்லமணியின் கல்லீரல் இதற்கு ஒத்துப்போகிறது. அவரின் உடலில் இருந்து சிறு பகுதி கல்லீரலை அகற்றி சிறுவனின் உடலில் பொறுத்தச் செய்யப்படும் அறுவை சிகிச்சைக்கும், இதர மருத்துவ செலவுகளுக்கும் மொத்தம் 2 லட்சம் ரூபாய் இல்லாமல் தவித்து வருகிறது இந்தக் குடும்பம். சிறுவனின் அப்பா தங்கபாண்டியன் தினக்கூலி வேலை செய்பவர் என்பதால் இந்தத் தொகையை ஏற்பாடு செய்வதில் மிகவும் சிரமப்பட்டு வருகிறார். இதுவரை செய்த சிகிச்சைக்கே பல இடங்களில் கடன் வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுவனின் உயிரைக் காப்பாற்ற நம்மால் முடிந்த நிதியுதவியை https://www.edudharma.com/fundraiser/help-little-sabarish-undergo-liver-transplant எனும் தளத்துக்குச் சென்று செய்வோம். நாம் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் சபரீஷின் அறுவை சிகிச்சை உடனடியாக நடக்க உறுதுணை புரியும்!
இந்த குழந்தைக்கு உதவி செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்
https://www.edudharma.com/fundraiser/help-little-sabarish-undergo-liver-transplant
ஆதார ஆவணங்கள்