பணம் இருப்பவர்களுக்கும் சரி இல்லாதவர்களுக்கும் சரி பொதுவான ஒரே விடயம் செலவு மட்டுமே, ஒவ்வொரு மனிதனும் பணக்காரன் ஆவதும் கடன்காரன் ஆவதும் அவன் ஈட்டும் பணம் அவனது செலவீனங்களை விட அதிகம் இருக்கிறதா இல்லையா என்பதை பொறுத்தே அமையும். நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக நாம் சில விஷயங்களை கையாண்டாலே போதும். நம் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும்.
பசுவின் கோமியத்தை சிறிதளவு குளிக்கும் நீரில் கலந்து தினமும் குளிக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் வீட்டில் கோமியத்தை தெளிக்க வேண்டும். இதை தொடர்ந்து 45 நாட்கள் விடாமல் செய்து வந்தால் தரித்திரம் விலகி பணம் வரும்.
பெண்கள் எப்போதும் தங்கள் இடது கையில் வெள்ளியாலான மோதிரத்தை அணிந்தால் பண வரவு அதிகரிக்கும். தினசரி குளிக்கும் முன்னர் பசும்பாலில் தயாரிக்கப்பட்ட தயிரை உடல் முழுவதும் பூசி சிறிது நேரம் கழித்து குளித்து வர தரித்திரம் நம்மை விட்டு விலகும்.
பெண்கள் கைகளில் மருதாணி வைத்துக்கொள்வதால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும், அதே போல் மஞ்சள் பூசி குளித்து வந்தாலும் மகாலட்சுமியின் அருளால் பணப் பற்றாக்குறை தீரும்.
ஆண்கள் அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுவதை வழக்கமாக வைத்துக்கொண்டாலும் செல்வ வளம் அதிகரிக்கும். ஆண்கள் அதிகாலை எழுந்து குளித்து முடித்து தங்களது உள்ளங்கையில் சிறிது சந்தனம் பூசிக்கொள்ள வேண்டும். அதன்பின் ஒரு ரூபாய் நாணயம் ஐந்தை எடுத்து உள்ளங்கையில் வைத்துக்கொண்டு அதனுடன் சிறிது வெட்டிவேரை வைத்துக்கொள்ள வேண்டும். பின் உள்ளங்கையை உங்கள் வாயருகே வைத்துக்கொண்டு “ஓம் குபேர லட்சுமியாய நம” என்ற மந்திரத்தை லட்சுமி தேவி மற்றும் குபேரரை மனதில் தியானித்தவாறே குறைந்தது 108 முறையாவது கூற வேண்டும்.
இந்த பூஜைக்கு பின் கையில் வைத்திருக்கும் நாணயத்தையும் வெட்டிவேரையும் உங்கள் பாக்கெட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்,மறுநாள் இந்த பூஜைக்கு புது நாணயத்தையும் புது வெற்றிவேரின் சிறு துண்டு எடுத்து உள்ளங்கையில் வைத்துக்கொண்டு மேற்கண்டவாறு மீண்டும் செய்ய வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் வீட்டில் பணம் எப்போதும் குறையாத நிலையை உண்டாக்கும். பல்வேறு வகைகளில் பொருளீட்டும் வாய்ப்புகள் ஏற்படும்.
குபேர லட்சுமி மந்திரம் சொல்லி பூஜை செய்து வருபவர்களுக்கு வெளியில் பணம் ஈட்டுவதற்கான வேளைகளில் ஈடுபடும் போது அதிக அளவு தனவரவு உண்டாகும்.