கடன் தொல்லைகள், பிரச்சினைகளை தீர்த்து தனவிருத்தி அடையவைக்கும் சொர்ண ஆகர்ஷண பைரவர்!

சிவபெருமானின் வடிவமாக திகழும் சொர்ண ஆகர்ஷண பைரவர் வணங்கி இவருக்கு உரிய மந்திரத்தை கூறினால் கடன் தொல்லைகள் நீங்கி தனவிருத்தி அடையலாம்.

இன்றைய சூழ்நிலையில் கடன் தொல்லையால் அவதிப்படாதவர்களே இருக்க முடியாது. செல்வந்தர்களாக இருந்தாலும் ஏதேனும் ஒரு வகையில் கடனை வாங்கி அதனை அடைக்க முடியாமல் அள்ளல்படுவார்கள்.

வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவிப்பவர்கள், தங்களுடைய அனைத்து கடன் பிரச்சினைகளுக்கும் ஏதாவது ஒரு வழியில் தீர்வு கிடைக்காதா என்றுதான் நினைப்பார்கள். இறை வழிபாட்டில் ஆர்வம் உள்ளவர்கள் ஆலயங்களுக்குச் சென்று, ஏதாவது எளிய பரிகாரத்தைச் செய்யலாமா என்று யோசிப்பார்கள்.

நாம் பொருளாதார சிக்கலில் இருந்து மீண்டு வர உதவும் தெய்வமாக திகழ்வர், சொர்ண ஆகர்ஷண பைரவர். சிவபெருமானின் வடிவமாக திகழும் பைரவரை, ‘சொர்ண ஆகர்ஷண பைரவர்’ என்றும் அழைப்பதுண்டு. இவரை வணங்கி இவருக்கு உரிய மந்திரத்தை கூறினால் கடன் தொல்லைகள் நீங்கி தனவிருத்தி அடையலாம். அந்த வழிபாட்டு வேளையில் அசைவ உணவை தவிர்ப்பது நல்லது.

வழிபடும் முறை

அகல்விளக்கில் நெய்யை நிரப்பி, தாமரை நூல் திரியை வைத்து தீபம் ஏற்றிட வேண்டும். ஏற்றிய தீபத்தை சொர்ண ஆகர்ஷண பைரவரின் படத்தின் முன்பாக வைக்க வேண்டும். இந்த தீபம் தினமும் சுமார் 30 நிமிடம் மட்டும் எரிந்தால் போதுமானது. பிறகு, சந்தனத்தை சொர்ண ஆகர்ஷண பைரவரின் நெற்றியிலும், பைரவியின் நெற்றியிலும் வலது மோதிர விரலால் வைக்க வேண்டும். அப்படி வைக்கும்போது, சந்தனம் பைரவர், பைரவியின் கண்களை மறைக்கக்கூடாது. பிறகு, சொர்ண ஆகர்ஷண பைரவரின் பாதத்திலும் அதே போல் சந்தனத்தை வைக்க வேண்டும். சந்தன பத்தியால் மூன்றுமுறை ஆராதிக்க வேண்டும். அப்படி ஆராதித்த பின்னர், கீழ்காணும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் மந்திரத்தை தினமும் 33 முறை வாசிக்க வேண்டும்.

ஓம் த்ரிபுராயை ச வித் மஹே
பைரவ்யை ச தீமஹி
தந்நோஹ் பைரவி ப்ரசோதயாத்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*