குறை மாதத்தில் பிறந்த உயிருக்கு போராடும் இரட்டை குழந்தைகளுக்கு நீங்கள் நினைத்தால் உதவி செய்யலாம். கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூரை சேர்ந்தவர்கள் பெருமாள்சாமி, செல்வராணி தம்பதியினர். செல்வராணி கர்ப்பம் ஆன பின் வீட்டிற்கு வரப்போகும் குழந்தைக்காக ஆர்வமாக காத்து இருந்தார். எப்போது குழந்தை அழுகை சத்தம் வீட்டை நிறைக்கும் என்று மிக ஆர்வமாக அவர் காத்து இருந்தார்.
ஆனால் அவருக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக 6 மாதம் இருக்கும் போதே வயிறு வலி வந்திருக்கிறது., அதோடு சரியாக கருத்தரித்து 24 வாரத்தில் குழந்தை பிறந்து இருக்கிறது. இரட்டை குழந்தைகளை பெற்ற செல்வராணி அதை கொண்டாட முடியாமல் தவித்து வருகிறார்.
காரணம் இரண்டு குழந்தைகளும் எடையில் மிக மிக குறைவாக இருக்கிறார்கள். ஒரு குழந்தை 660 கிராம் மட்டுமே இருக்கிறது. இன்னொரு குழந்தை அதைவிட குறைவாக 640 கிராம் மட்டுமே இருக்கிறது. இப்படி ஒரு நிலை யாருக்காவது வருமா சொல்லுங்கள்.
தற்போது இந்த இரண்டு குழந்தைகளும் தீவிர சிகிச்சையின் பலனில் உயிர் வாழ்ந்து வருகிறார்கள். ராமகிருஷ்ணா மருத்துவமனையில் என்ஐசியூ பிரிவில் இவர்கள் இருவரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இவர்களை மூன்று மாதம் இதே பிரிவில் வைத்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே, இவர்களை முழுமையாக காப்பாற்ற முடியும். இப்போது வரை ஒரு மாதம் முடிந்து இருக்கிறது. இன்னும் இரண்டு மாதம் இருக்கிறது. ஆனால் இதற்கு செலவு செய்ய பெருமாள்சாமியிடம் பணம் இல்லை.
இன்னும் சிகிச்சைக்கு 6 லட்சம் ரூபாய் தேவை. ஏற்கனவே சிகிச்சைக்கு பெருமாள்சாமி 5.5 லட்சம் வரை செலவு செய்துவிட்டார். அவர்கள் குடும்பம் மிக மிக வறுமையான குடும்பம். கடன் வாங்கித்தான் முதல் செலவை செய்து இருக்கிறார்.
நீங்கள் நினைத்தால், அந்த இரண்டு உயிர்களை காக்க முடியும். நீங்கள் இவர்களுக்கு உதவி செய்தால் இன்னும் இரண்டு மாதம் இரட்டை குழந்தைகள் சிகிச்சை பெற்று குணமடைய முடியும். அந்த இரண்டு பிஞ்சுகளின் உயிர் உங்களின் கைகளில் இருக்கிறது. உங்களால் முடிந்த உதவிகளை உடனே இவர்களின் குடும்பத்திற்கு செய்யுங்கள்.. அந்த உதவி உங்களுக்கு ஒருநாள் கைமாறாக திரும்பி வரும்