உங்களின் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்!

சென்னையை சேர்ந்த சிறுமியின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். சென்னையை சேர்ந்தவர் சக்திவேல், இவர், திருமங்கலம் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். அவரது 6 வயது மகள் தன்ஷிகாவிற்கு உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. சிறுமி 1 வயது முதலே கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்.

அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. சிறுமியின் கல்லீரல் முற்றிலும் சேதமடைந்தது. அவரை காப்பாற்ற ஒரே வழி, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தான் தீர்வு என டாக்டர்கள் தெரிவித்து விட்டனர்.

சக்திவேலும், அவரது மனைவியும் கல்லீரலை தருவதற்கு தயாராக உள்ளனர். இதற்கான சோதனை செய்ய உடனடியாக ரூ.2,50,000 தேவைப்படுகிறது. ஆனால், ஏழ்மை நிலையில் வாடும் சக்திவேல், தனது மகளின் சிகிச்சைக்காக தனது வீட்டை வங்கியில் அடமானம் வைத்துள்ளார்.

நகைகள், வெள்ளி பொருட்கள் அனைத்தையும் விற்று விட்டார். பெட்டிக்கடையில் இருந்து வருமானம், மகளின் மருத்துவ பரிசோதனைகளுக்கு போதுமானதாக இல்லை. உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்து விட்டனர். இதனால், தங்களது மகளை காப்பாற்ற வேண்டும் என அவர்கள் போராடி வருகின்றனர்.

சிறு சிறு நீர் துளிகள் சேர்ந்து கடலாக மாறுவது போல், நல்லஉள்ளம் படைத்தவர்கள் அளிக்கும் சிறு சிறு உதவிகள் சிறுமியின் உயிரை காப்பாற்றும். இந்த முக்கியமான நேரத்தில், உங்களின் சிறிய உதவி, ஏழை குடும்பத்தை காப்பாற்றும்.

இந்த சிறுமியின் உயிர் உங்களை நம்பி இருக்கிறது. நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் இவளின் உயிரை காக்கும். உங்களால் முடிந்த உதவியை செய்ய முன்வாருங்கள்.. இன்று நா செய்யும் உதவு ஒருநாள் நமக்கும் உதவும்…

இந்த சிறுமிக்கு உதவ விரும்பினால்

இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.

http://bit.ly/savedhansikha

ஆதார ஆவணங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*