பார்வை திறனும் பேச்சு திறனும் இழந்து பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுவனுக்க உதவும் ஈகை குணம் கொண்ட நல்லோரே… பண உதவி செய்ய விரும்புவோர் https://www.edudharma.com/fundraiser/help-to-save-saravanan என்ற இணையதளம் மூலம் உதவலாம்.
சேலத்தைச் சேர்ந்த சரவணன் மற்றும் சுசீலா தம்பதியினரின் மகன் ஸ்ரீசரண் (11)வயது. சரவணன் மதுபானக் கடை பாரில் வேலை செய்யும் ஊழியர். எல்லோரையும் போல ஆடி ஓடித் திரிந்த ஸ்ரீசரணுக்கு பார்வை மங்களாக தெரியத் தொடங்கியது.
உள்ளூரிலே மருத்துவமனை சென்று சிகிச்சை செய்து பார்த்ததில் கண்ணில் எந்தப் பிரச்சனையுமில்லை நரம்பில் பிரச்சனையுள்ளது என பெங்களூருவில் உள்ள நிம்ஹான் மருத்துவமனைக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர் .
வெறும் (6000) ஆறாயிரம் சம்பளம் பெறும் சரவணனுக்கு பேரிடியாக இருந்தது. இருந்தும் தன் பிள்ளையைக் காப்பாற்ற வேண்டுமென பெங்களூருவிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை மேற்கொண்டார். பல டெஸ்ட் செய்து சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் (Adrelo leuko dystrophy ) எனும் நரம்பு பிரச்சனையுள்ளது என சி.எம்.சி மருத்துவமனை வேலூருக்கு பரிந்துரைத்தனர்.
தன் பிள்ளையைக் காப்பாற்ற ஒவ்வொரு இடமாக தூக்கி அலைந்த சரவணன் வேலூரிலும் வந்து மருத்துவம் பார்க்க தொடங்கினர்.
இரண்டு மாதங்கள் சிகிச்சை தொடர்ந்தது துரதிர்ஷ்டமாக குழந்தை சரணுக்கு இரண்டு கண்ணும் பார்வை பறிபோனது. எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்ய வயதும் கூடிப் போக செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
நாளடைய நாளடைய பார்வை பறிபோன சிறுவனுக்கு ஒரு பக்க கையும், காலும் செயலிழக்க குடும்பம் சோகத்தில் மூழ்கிப் போனது. மிகவும் மோசமான சூழலில் உள்ள பையனைக் காப்பாற்ற சி.எம்.சி மருத்துவமனை தன்வந்திரி வைத்தியசாலை நாமக்கல்லிற்கு பரிந்துரைக்க தற்பொழுது நாமக்கல்லிலுள்ள உறவினர் வீட்டில் வைத்து பிசியோதெரபி செய்து வைத்தியம் பார்த்து வருகிறார் சரவணன்.
தன் பிள்ளையை பழையபடி நடந்து ஆடி ஓட வைக்க வேண்டுமென முயற்சியில் இருந்த சரவணனுக்கு தன் பிள்ளையின் ஒருபக்க கை காலும், கண்ணும், வாய் பேச முடியாமையும் கண்டு நிற்கதியாய் இருக்கிறார். தன்வந்திரி வைத்திய சாலையில் உள்ள வைத்தியர்கள் லோரன்ஸோ எண்ணெய் வாங்கி தேய்த்து வந்தால் குணமடைய வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். 500 மிலி. 25000 ரூ மாதம் மூன்று முறை தேய்க்க சுமார் 85,000ரூ தேவைப்படுகிறது.
தினக் கூலியான சரவணனுக்கு இது எப்படி சாத்தியமாகும் மாதம் 85,000 ரூ. என்ன பண்றதுனே தெரியலைங்க சார் இவ்வளவு பணம் பெரட்டி என் பிள்ளைய காப்பத்திடுவேனானு ஒவ்வொரு டிரஸ்டா உதவி கேட்டுட்டே இருக்கேன் சார். இருங்க வாட்டர் பாக்கெட் கேட்கிறாங்க என சொல்வதறியாது போனை வைத்தார் சரவணன்.
பார்வை திறனும் பேச்சு திறனும் இழந்து பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுவனுக்க உதவும் ஈகை குணம் கொண்ட நல்லோரே… பண உதவி செய்ய விரும்புவோர் https://www.edudharma.com/fundraiser/help-to-save-saravanan என்ற இணையதளம் மூலம் உதவலாம்.
மேலும் தொடர்புக்கு:- எதுதர்மா (அறக்கட்டளை பதிவு எண்) 12 A: 1419(32)80-91 மற்றும் 80- G-1419(32)/CIT-1/CBE/08-09
எதுதர்மா, ரத்னம் டெக்சோன், பொள்ளாச்சி மெயின் ரோடு, ஈச்சனாரி, கோயம்பத்தூர், தமிழ்நாடு- 641021, +919600111639