முருகன் வழிபாடு தமிழர்களிடையே தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கமாகும். தமிழர்கள் முருகனை தமிழ் கடவுள் என்று அழைத்து மகிழ்கின்றனர். முருகன் அல்லது கந்தர், குமரன் என்று பல்வேறு பெயர்களுடன் உலகமுழுவதும் தமிழர்கள் வாழும் இடமெங்கும் முருகனுக்கு கொயிலேழுப்பி தங்களது முருக பக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தமிழர்களின் கடவுளான முருகனுக்கு தமிழகமெங்கும் ஆயிரக்கணக்கான கோயில்கள் இருப்பினும் அதில் அறுபடை வீடுகள் மிக முக்கியமானதாகும். இந்த அறுபடை வீடுகளில் ஒரு கோயிலான திருச்செந்தூர் முருகன் கோயிலின் மூலவர் சிலையை சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு டச்சுப் படையினர் கொள்ளையடித்து சென்றுள்ளனர். டச்சுப் படையினரால் கொள்ளையடிக்கப்பட்ட அந்த சிலை மீண்டும் கோயிலை எப்படி வந்தது கொல்லையடுத்த டச்சு படையினர் என்ன ஆனார்கள் என்று தெரியுமா? விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.
1648 ஆம் ஆண்டு டச்சுப் படையினர் கடல் மார்க்கமாக வந்து திருச்செந்தூர் முருகன் கோயிலை கைப்பற்றினர். அந்த சமயத்தில் திருச்செந்தூர் திருமலை நாயக்கரின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாகும், திருமலை நாயக்கர் பெரும் படையுடன் டச்சுக்காரர்களுடன் போரிட்டார் ஆனால் அந்த போரில் அவர் வெற்றிபெறவில்லை.
போரில் வெற்றிபெற்ற டச்சுக்காரர்கள் கோயிலில் இருந்த தங்கங்களை கொள்ளையிட்டதுடன், முருகனின் உற்சவர் சிலை மற்றும் நடராஜர் சிலைகளை தங்க சிலை என்று கருதி கொள்ளையடித்து சென்றனர்.
கப்பலில் செல்லும் வழியிலேயே சிலைகளை உருக்க முயற்சி செய்தனர். அப்பொழுது திடீரென்று கடலில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. பெரும் வேகத்துடன் கடலில் சூறாவளி காற்று வீசத் தொடங்கியுள்ளது. கப்பல் கடுமையாக ஆட்டம் கண்டு கப்பம் மூழ்கும் சூழல் ஏற்பட்டுள்ளது, இதனால் பெரும் அச்சமடைந்த டச்சுப்படையினர் அனைவரும் பெரும் அச்சமடைந்து முருகனின் சிலையை கைப்பற்றியதால் தான் இப்படி நடக்கிறது என்று உணர்துள்ளனர். பின் அனைவரும் ஒருமனதாக தாங்கள் கைப்பற்றிய முருகன் சிலைகளை கடலில் போட்டுள்ளனர். அடுத்த கணமே கடலில் ஏற்பட்ட கொந்தளிப்புகள் சட்டென்று நின்றுள்ளது. இந்த நிகழ்வு டச்சு நாட்டு இராணுவ குறிப்பிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நிகழ்ந்த அந்து ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூர் கோயிலுக்கு உற்சவர் சிலை செய்யும் வேலைகளை கோயில் நிர்வாகத்தினர் மேற்கொண்டுள்ளனர். அந்த சமயத்தில் வடமலையப்பர் என்ற முருக பக்தரின் கனவில் தோன்றிய முருகர். உற்சவ மூர்த்திகள் கடலில் இருக்கும் இடத்தை காண்பித்து, அதற்கு அடையாளமாக ஒரு எலுமிச்சை பழம் மிதக்கும் என்றும் கருட பறவை இடத்தை அடையாளம் காட்டும் என்றும் அறிவித்து அருளியுள்ளார்.
இந்த தகவலை கோயிலில் உள்ளவர்களுக்கு தெரிவித்த வடமலையப்பர் மக்களை திரட்டிக்கொண்டு கடலில் உற்சவர் சிலையை தேட தொடங்கியுள்ளார். கனவில் கண்டபடியே கடலில் ஒரு இடத்தில் கருடப்பறவை குறிப்பிட்ட இடத்தை வட்டமிட்டு அடையாளம் காட்டியுள்ளது. அதே போல் அந்த இடத்தில் ஒரு எலுமிச்சம் பழமும் மிதந்துள்ளது. இது தான் முருகன் கனவில் காட்டிய இடமென்று அறிந்த மக்கள் கடலில் மூழ்கி உற்சவர் சிலைகளை வெளியே கொண்டு வந்துள்ளனர்.
ஒரு சுப தினத்தில் மீண்டும் கோயிலை அடைந்த முருகன் சிலை இன்றளவும் மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த சம்பவத்தை இன்றளவும் திருச்செந்தூர் சுற்றியுள்ள மக்கள் நாட்டார் பாடல்களின் வழியே வெளிப்படுத்தி வருகின்றனர்.