இயக்குனர் விஜய் இயக்கத்தில் பிரபு தேவா, தம்மன்னா, நந்திதா, கோவை சரளா நடிக்கும் நகைச்சுவை மற்றும் திகில் திரைப்படம். இத்திரைப்படத்தின் தாயரிப்பாளராக இப்படத்தின் கதாநாயகன் பிரபு தேவா தயாரிக்க, இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.
இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் அயனங்க போஸ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஆன்டனி எடிட்டிங் செய்துள்ளார். மேலும் இப்படமானது 2016-ம் ஆண்டு இதே படக்குழுவினரால் வெளியான தேவி திரைப்படத்தின் தொடர்ச்சி ஆகும். நகைச்சுவையான காட்சிகளை கொண்டு ஒரு திகழ் படத்தினை இயக்கியுள்ளார் இயக்குனர்.
நகர்ப்புற வாழ்கைகையை பிடித்து நகரத்தில் ஒரு அழகிய மார்டர்ன் பெண்ணை திருமணம் செய்யவேண்டும் என்று எண்ணம் கொண்டுள்ள இளைஞனை ஒரு கிராம பெண்ணிற்கு மணமுறிக்கின்றனர் பெற்றோர்கள்.
ரூபி என்னும் ஆத்மாவால் விறுவிறுப்பான திரைக்கதை ஒன்றினை இயக்கியுள்ளார் இயக்குனர், இத்திரைப்படத்தினை தொடர்ச்சியாக இப்படத்தில் அந்த ரூபி என்கிற ஆத்மாவின் காதலனான அலேக்ஸ் என்னும் ஆத்மவும் இக்கதையில் இணைகிறது.
தமன்னாவின் உடலில் ரூபி-யும், பிரபு தேவாவின் உடலில் அலேக்ஸ் என்கிற ஆத்மாவும் இணைந்து திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்று போராடுகிறது. இறுதியில் இவ்விரு ஆத்மாவும் திரைத்துறையில் சாதித்ததா ? அல்லது திருமணமான பிரபு தேவா – தமன்னா ஆகியோரின் காதல் வாழ்க்கையை இடையூறு செய்யாமல் விட்டுச்சென்றதா? என்பதே படத்தின் கதை.