செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் “NGK” திரை விமர்சனம்!

சில பிரபலங்களின் கூட்டணி அமைய வேண்டும் என்று ரசிகர்களே ஆசைப்படுவார்கள். அப்படி ஒரு கூட்டணி தான் சூர்யா-செல்வராகவன், இவர்கள் முதன்முதலாக இணைந்து மக்களுக்கு கொடுத்திருக்கும் படம் NGK. இன்று வெளியாகியுள்ள இப்படம் எப்படி இருக்கிறது, பார்ப்போம்.

சூர்யா படித்து நல்ல வேலைக்கு சென்று இயற்கை விவசாயம் செய்ய வருகிறார். அதை நன்றாகவும் செய்ய, ஆனால், பலரும் அதை எதிர்க்கின்றனர்.

அதற்கு உதவியாக எம்.எல்.ஏவிடம் போக, அவர் இந்த பிரச்சனையை தீர்க்க, என் கட்சியில் சேர்ந்துவிடு என்கின்றார். சூர்யாவும் வேறு வழியில்லாமல் கட்சியில் சேர்கின்றார்.

அதை தொடர்ந்து மெல்ல கட்சியில் முன்னேற, அவர் நினைத்த இடத்தை என் ஜி கே அடைந்தாரா? இது தான் மீதிக்கதை.

சூர்யா எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் மிரட்டி விடுவார், அப்படி அவர் பக்கம் எந்த குறையும் சொல்ல முடியாது, முடிந்த அளவிற்கு நன்றாக நடித்துக் கொடுத்துவிட்டார். ஒரு கட்சியில் அடிமட்ட தொண்டனாக இருந்து அவர் பாத்ரூம் கழுவி முன்னேறுவது போல் காட்டியதெல்லாம் செல்வராகவன் டச்.

ஆனால், பிரச்சனை அது தான், இப்படி காட்சிக்கு காட்சி செல்வராகவன் டச் இருக்கும் என்று தான் ரசிகர்கள் வந்திருப்பார்கள். இங்கோ செல்வராகவன் இந்த படத்தை எடுத்தாரா இல்லை ராம் கோபால் வர்மா எடுத்தாரா என்று ரேஞ்சில் போகிறது.

இடைவேளை நண்பன் உயிர் விடுவது, அரசியலின் யதார்த்தம் இரண்டே கட்சி தான். சமீபத்தில் நடந்த ஒரு அமைச்சரின் பாலியல் கேஸ் என ஒரு சில விஷயங்கள் கவனிக்க வைக்கின்றது.

ஆனால் படத்திலேயே ஒரு வசனம் வரும் அரசியலில் ஆழம் பார்த்து கால் விட வேண்டும் என்று, அதேபோல் செல்வாவும் காதல், பேண்டஸியில் கலக்கிவிட்டு அரசியலில் கொஞ்சம் பார்த்து இறங்கியிருக்கலாம்.

சாய் பல்லவி கதாபாத்திரம் கொஞ்சம் செயற்கையாக இருந்தாலும் செண்ட் வாசனை பிடிப்பது, ராகுலிடம் அதட்டி பேசுவது என ஸ்கோர் செய்துள்ளார். ரகுல் படத்தில் எல் கே ஜி ப்ரியா ஆனந்தை நியாபகப்படுத்துகிறது.

சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு கவனிக்க வைக்கின்றது. அதையெல்லாம் விட யுவனின் பின்னணி இசையே படத்தின் மிகப்பெரிய பலம்.

மொத்தத்தில் இது செல்வராகவன் படமாகவும் இல்லை, சூர்யா படமாகவும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*