ஆலயத்திற்குள் செல்வது போல கனவு கண்டால், நண்பர்களின் வட்டாரத்தில் அன்பும் ஆதரவும் ஏற்படும். உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் விலகி மகிழ்ச்சி ஏற்படும்.
ஆலயத்திற்குள் நுழைய முடியாமல் கூட்டத்தில் மாட்டிக் கொண்டு அவதிப்படுவது போல கனவு கண்டால், எதிர்பார்க்காத பிரச்சனையில் சிக்கி கொண்டு அவதிப்படுவீர்கள். உங்களின் வளர்ச்சியை கெடுக்கவே சிலர் முயற்சிக்கிறார்கள் என்பதை உணருங்கள். இறைவனை மனபூர்வமாக நம்புங்கள். சிக்கல்களிருந்து விடுபடவும், பணவிரயம் ஆகாமல் இருக்கவும் சிந்தித்து செயல் படுவது நல்லது.
இறைவனை கனவில் கண்டால், உங்களை வீழ்த்த யாராலும் முடியாது. பிரச்சனைகள் விலகி யோகங்கள் உங்களை தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். திருமண தடை விலகி நல்ல வரன் அமையும். ஆபத்திலிருந்து தப்பித்து விடுவீர்கள்.
இறைவனுக்கு மாலை போடுவது போல கனவு கண்டால், லாபகரமான செயலில் ஈடுபடுவீர்கள். நல்ல வளர்ச்சியை அடைவீர்கள். பல பாக்கியங்களை பெற்று சுகமாக வாழ்வீர்கள்.
திருவிழாவை சுற்றி பார்ப்பது போல கனவு கண்டால், வீடு-வாகனம், பொருட்கள் வாங்கும் யோகம் வரும். அதனால் கடனும்வாங்குவீர்கள். இருந்தாலும் குடும்பத்திலும், உங்கள் மனதிலும் சந்தோஷம் இருக்கும். புதிய சுமை இருந்தாலும் அதை சுகமான சுமையாகவே கருதுவீர்கள்.
திருவிழாவில் யாரையாவது தேடுவது போல கனவு கண்டால், தொழிலில் சில சங்கடங்கள், உறவில் விரிசல் போன்ற சிறு சிறு சங்கடங்கள் வரும். காலம் கடந்து கொண்டு இருந்த விஷயங்களுக்கு புதிய வழி கிடைக்கும். அதனால் லாபமும் உண்டாகும்.
கனவில் அரண்மனை தோன்றுதல் மிகவும் நல்லது. அவ்வாறு கனவு காண்பவர் பேரதிஷ்டம் உடையவராவார்: உறவினர் மூலம் திரண்ட சொத்து வந்து சேரும். லாட்டரி போன்றவற்றில் பரிசு கிடைக்கும். போட்டிப் பந்தயங்களின் மூலம் பெருத்த ஆதாயம் கிடைக்கும்.
ஓர் அணைக்கட்டு உடைந்து விட்டது போல் கனவு தோன்றினால் குடும்பத்தில் சச்சரவு உண்டாகும். சொத்துக்கள் அழியும். இக்கனவு நாட்டிற்கும் பொருந்தும். நாட்டில் நோய்கள் பெருகி உயிர்ச்சேதம் உண்டாகும். கிளர்ச்சிகள் தோன்றிப் பொருட்சேதம் உண்டாகும்.
தோட்டத்தில் இருப்பது போல கனவு கண்டால், இனிமையான தகவல் கிடைக்கும். அதனால் இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி ஏற்படும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். நட்பால் நன்மை ஏற்படும்.
பட்டு போன மரத்தை கனவில் கண்டால், சங்கடமான நிகழ்ச்சிகள் நடக்கும். கடன் கொடுத்தவர்கள் அதிகமாகவே உங்களுக்கு தொல்லையும் கொடுக்க ஆரம்பிப்பார்கள். அக்கம் பக்கம் வீடுகளால் மனசங்கடங்கள் உருவாகும்.
முள் செடியில் உங்கள் துணி மாட்டி கொண்டது போல கனவு கண்டால், பழைய பிரச்சனையில் இருந்து தப்பிப்பீர்கள். இருந்தாலும் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சூழ்நிலை இது. புதிய பிரச்சனை உருவாகும். அதிலிருந்து தப்பிக்கும் வழியை தெரிந்து கொள்வீர்கள். இருந்தாலும் அந்த பிரச்சனையால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஒற்றுமையில் விரிசலும் ஏற்படும்.
செடியில் இருந்து பூக்களை பறிப்பது போல கனவு கண்டால், நல்ல பலன்கள் கிடைக்கும். நிலம் வீடு, நகை வாங்கும் யோகம் ஏற்படும். வேலையில் திருப்தியான நிலை இருக்கும். வியாதியால் அவதிப்பட்டவர்களுக்கு நல்ல மருத்துவத்தால் உடல் பிரச்சனை விலகும்.
கயிற்றை இரு கரங்களால் பிடித்து தொங்குவது போல கனவு கண்டால், விபத்துக்கள் உண்டாகும். ஆகவே பயணம் செல்லும் போது எச்சரிக்கையாக செல்வது நல்லது. ஆபத்தில் இருந்து உங்களை விடுபட வைக்க சில நல்ல உள்ளம் படைத்தவர்கள் வருவார்கள். அவர்களின் வருகை உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் மேன்மையே ஏற்படுத்தும்.
கயிற்றை பிடித்து தொங்கும் போது யாராவது நீங்கள் பிடித்து தொங்கி கொண்டு இருக்கும் கயிற்றை அறுப்பது போல கனவு கண்டால், மோசமான குணம் உடையவர்களின் நட்பால் அவதிபடுவீர்கள். அவர்கள் யார் என்று தெரிந்துக் கொண்டு அவர்களின் நட்பை துண்டித்துவிடுவதன் மூலம் பாதகத்தில் இருந்து தப்பிக்கலாம். புதிய செயல் செய்யும் முன் பல முறை சிந்தித்து எச்சரிக்கையாக செய்தால் நல்லது.
நீங்கள் தண்ணீரில் தத்தளிக்கும் போது உங்களுக்கு கயிற்றை கொடுத்து யாரோ உதவுவது போல கனவு கண்டால், பெரிய லாபகரமான விஷயங்கள் நீங்களே எதிர் பார்க்காமல் நடக்கும். தடைபட்ட சுபநிகழ்ச்சிகளின் தடை விலகும்.
நகை வாங்குவது போல கனவு கண்டால், புதிய தொழில் தொடங்குவீர்கள். அல்லது தொழில் விருத்தி உண்டாகும். நற்பலன்கள் தேடி வரும். மனசங்கடங்கள் நீங்கி மன நிம்மதியும், சந்தோஷமும் பெறுவீர்கள். கடனுக்காக காத்து இருப்பவர்களாக இருந்தால் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.
நகையை அடமானம் வைப்பது போல கனவு கண்டால், எந்த பொருட்களையாவது விற்பீர்கள். அது அசையும் பொருட்களாகவும் இருக்கலாம் அல்லது அசையாத பொருட்களாகவும் இருக்கலாம். இருந்தாலும் குடும்பத்தின் செல்வாக்கு குறையாது.
நகை திருட்டு போவது போல கனவு கண்டால், திடீர் தனவரவு உண்டாகும். பாவ செயலில் ஈடுபடுவீர்கள். தீய சகவாசம் தெருவில் நிறுத்தும் என்பதை அறிந்து செயல்படுவது நல்லது. இறைவனை வணங்கினால் பாதகத்திலிருந்து தப்பிக்கலாம்.
பழங்களை கனவில் கண்டால், சுபநிகழ்ச்சிகள் நடக்கும். லாபகரமான விஷயங்கள் தடையில்லாமல் நடக்கும். குடும்பத்தில் இழந்த நிம்மதி திரும்ப கிடைக்கும். நல்ல நிலைக்கு வரும் நேரம் வெகுதொலைவில் இல்லை என்பதை உணர்வீர்கள்.
பழங்களை மற்றவர்களுக்கு கொடுப்பது போல கனவு கண்டால், உங்கள் சந்தோஷத்தை பங்கு போடவே யாராவது வருவார்கள். எடுக்கும் முயற்சியில் பின்னடைவுகள் உண்டாகும். பண விஷயத்தில் ஏற்ற தாழ்வு ஏற்படும் சண்டை சச்சரவுக்கு போகாமல் இருந்தாலும் உங்களிடம் வீண் சண்டை போடவே சிலர் வருவார்கள்.
காய்களை நறுக்கவது போல கனவு கண்டால், மனதில் இத்தனை நாட்கள் வாட்டி எடுத்துக்கொண்டிருந்த சங்கடங்களும், பிரச்சனைகளும் விலகும். பெரியோர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும்.
அடுப்பில் பூனை தூங்குவதுபோலவோ, அல்லது பூனை குட்டி போட்டுள்ளது போலவோ கனவு கண்டால் அவ்வாறு கனவு கண்டவரது உடல்நலம் கெடும், தொழிலும் நட்டப்படும்.
விஞ்ஞான ஆய்வுக்கூடம் ஒன்றைக் கனவில் காண்பவர், ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டு அதில் வெற்றி காண்பார்.
கனவில் ஓர் ஆசிரமம் தோன்றுமானால், அவ்வாறு கனவு காண்பவரது மன அமைதியின்மையை அது குறிக்கும்.
இரும்பை பற்ற வைப்பது போல கனவு கண்டால், உங்களை விட்டு பிரிந்தவர்கள் உங்களை தேடி வருவார்கள். வியபாரத்தில் எதிர்பாராத நன்மையும் லாபமும் ஏற்படும். உங்கள் மனதை மாற்ற சிலர் முயற்சிப்பார்கள். ஆனால் நன்மையுடன் முன்னேறி வரலாம்.
இரும்பை உடைப்பது போல கனவு கண்டால், பல நாட்கள் வாட்டி எடுத்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும். ஆனால் வெற்றி உங்கள் பக்கமே ஏற்படும். சிந்திக்கும் ஆற்றலும், நிதான போக்கும் உண்டாகும். உடன் இருப்பவர்களால் மனநிம்மதி குறையும்.
இரும்பை வாங்குவது போல கனவு கண்டால், எதிர்பாராத சங்கடங்கள் வேலையில் சிரமங்கள் உண்டாகும். பணவிரயம் சந்தோஷம் குறையும். எச்சரிக்கையாக நடந்து கொள்வதே நல்லது.
இரும்பை பிடித்து கொண்டு இருப்பது போல கனவு கண்டால், நீண்ட நாள் நிலுவையில் இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். உங்களுக்கு உதவ பலர் முன்வருவார்கள். பொருளாதர நெருக்கடியிலிருந்து தப்பிப்பீர்கள். கைவிட்டுபோக இருந்த பொருட்களை காப்பாற்றி விடுவீர்கள்
இறந்து போனவர்கள் கனவில் வந்தால், அவர்களின் ஆசியால் நன்மைகள் ஏற்படும். வரும் ஆபத்தை முன் கூட்டியே அறிவீர்கள். தலைக்கு வந்தது தலைபாகையுடன் போவது போல, பெரிய சங்கடங்கள் வந்தாலும் அது நன்மைக்குதான் என்று உணர்வீர்கள்.
இறந்தவர்கள் கனவில் உங்களிடம் பேசுவது போல கனவு கண்டால், ஆபத்தான தருணத்தில் உங்களுக்கு உதவ சிலர் முன்வருவார்கள். செல்வாக்கை இழந்தவர்களாக இருந்தாலும் சிக்கிமுக்கி கல் பல வருடம் தண்ணீரில் இருந்தாலும் அதை எடுத்து இரும்பால் அடித்தால் நெருப்பு வருவது போன்று, அவப்பெயரில் இருந்தவர்கள் நற்பெயர் திரும்ப பெறுவர். உற்றார் உறவினர்களிடத்தில் புகழின் உச்சிக்கே போவீர்கள்.
இறந்தவர்கள் உங்களுடன் அல்லது உங்கள் குடும்பத்தாருடன் சாப்பிடுவது போல கனவு கண்டால், புகழும் அதன் மூலமாக செல்வங்களும் ஏற்படும். விபத்தில் இருந்தும் தப்பிப்பீர்கள். உங்கள் கஷ்டத்தை மற்றவர்கள் தீர்த்து வைப்பார்கள். பழைய உறவு மீண்டும் புதிய உறவை போல மலரும். வியபாரத்தில் எதிர்பாராத ஆதாயம் ஏற்படும்.
இறந்தவர்கள் உங்கள் இல்லத்தில் தூங்குவதை போல கனவு கண்டால், பெரிய ஆபத்தில் இருந்து தப்பிப்பீர்கள். யார் மூலமாவது புதிதாக பிரச்சனை ஏற்படும். இருந்தாலும் அந்த பிரசசனை சுமூகமாக எந்த பெரிய பாதகமும் இல்லாமல் விலகும்.
இறந்தவர்கள் உங்களுக்கு உணவ பரிமாறுவது போல கனவு கண்டால், மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் தடை விலகி சுபமாக நடக்கும். வழக்கு நடந்து கொண்டு இருந்தால் அது உங்களுக்கு சாதகமாகவே இருக்கும்.
புது துணி அணிவது போல கனவு கண்டால், புதிய சிக்கல்கள் உருவாகும். எதிர்பாராத வித்தியாசமான நிகழ்ச்சிகள் நடக்கும். சும்மா இருந்தாலும் உங்களிடத்தில் வீண் சண்டைக்கு யாராவது வருவார்கள். இப்படி திடீர் என்று இந்த சம்பவத்தால் மன அமைதியில்லாமல் சிறிது நாட்கள் அவதிப்படுவீர்கள் சில நாட்களுக்கு பிறகுதான் யார் மூலமாவது நன்மை கிடைக்கும்.
கிழிந்த துணியை அணிந்து இருப்பது போல கனவு கண்டால், பண வரவு இருக்கும். ஒரு காரியத்தை தொடங்குவீர்கள். அதுசுலபத்தில் நடக்காது. இருந்தாலும் விடா முயற்சியால் வெற்றி பெறுவீர்கள். புது வரவும் அதனால் உற்சாகமும் ஏற்படும்.
கிழிந்த துணியை தைப்பது போல கனவு கண்டால், புகழ், செல்வம் உண்டாகும். இனிமையான செய்திகள் கிடைக்கும். பணம் பற்றாக் குறையிருக்காது. நினைத்ததை சாதிப்பார்கள்.
துணியை கிழிப்பது போல கனவு கண்டால், வேலையில் சில மாற்றம், உறவில் விரிசல் போன்றவை உண்டாகும். மனப்பூர்வமாக யாரை நம்பினீர்களோ அவர்களால் பிரச்சனை ஏற்படும். பிறகுக்கு நன்மை செய்தாலும் அவர்கள் உங்களை குறைதான் கூறுவார்கள்.
கிழிந்த துணியை உங்கள் குடும்பத்தினர் உடுத்தியிருப்பது போல கனவு கண்டால், ஏதோ ஆபத்து வரும். இருந்தாலும் இறைவனின் ஆசியாலும் உங்கள் புத்திசாலிதனத்தாலும் பெரிய ஆபத்தில் இருந்து தப்பி வருவீர்கள். குடும்பத்தில் நிம்மதியின்மை இருக்கும். உங்களையும் உங்கள் குடும்பத்தையும் யாரோ ஒரு மூன்றாம் நபர் ஆட்டிபடைப்பார்.
கனவில் ஓர் மருத்துவமனை தோன்றுமானால் அவ்வாறு கனவு காண்பவர் தமது உடல் நலம் பேணுவதில் கொண்டுள்ள கவனத்தைக் குறிக்கும்.
பறப்பது போல் கனவு காண்பவர்கள் வாழ்வில் மிக உன்னதனான நிலையை அடைவார்கள்..இதுவரை இருந்துவந்த கஷ்டங்கள் நீங்கும்.
தான் வாய்விட்டு அழுது கொண்டிருப்பது போல் கனவு தோன்றினால் எதிர்கால வாழ்க்கையில் இடையூறுகள் உண்டாகும்.
தன்னை அலங்கரித்துக் கொள்வது போலக் கனவு கண்டால் அவ்வாறு கனவு கண்டவர் செய்யும் தொழிலில் நட்டம் ஏற்படும்.
தன்னைப் பிறர் அலங்கரிப்பது போலக் கனவு கண்டால் நண்பரால் நம்பிக்கை மோசடிக்கு ஆளாக நேரிடும்.
பிறரை அவமரியதை செய்வது போலக் கனவு கண்டால் கைகூடாமல் இருந்த காரியங்கள் இனி கைகூடிவரும்.
தன்னைப் பிறர் அவமரியாதை செய்வது போலக் கனவு கண்டால், சிறி சிறு தொல்லைகளும், துன்பங்களும் வரக்கூடும்.
தான் பெரியோர்களை அவமரியாதை செய்வது போலக் கனவு கண்டால், அவ்வாறு கண்டவரது முதலுக்கு மோசம் வரும்.
ஒரு இடத்தில் தண்ணீர் இருப்பது போல கனவு கண்டால், பிரச்சனைகள் விலகும். புதிய நண்பர்களால் நன்மை ஏற்படும்.
வறண்ட குளம் இருப்பது போல கனவு கண்டால், புதிய செலவுகள் அதிகம் உண்டாகும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து நல்ல தகவல்கள், பணம் சம்மந்தபட்ட தகவல்கள் வர தாமதமாகும் அல்லது அதில் ஏதாவது தடைகள் உண்டாகும்.
குளத்தில் அதிக தண்ணீர் இருப்பது போல கனவு கண்டால், பெரிய இடத்தில் இருந்து ஆதரவும் அவர்களாலே பல நன்மைகளும் உண்டாகும். வெகுநாட்களாக இருந்த பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.
குளத்தில் தாமரை பூக்கள் இருப்பது போல கனவு கண்டால், பணவரவு உண்டாகும். கடன் சுமை குறையும். நல்ல நல்ல நண்பர்களின் ஆதரவினால் வியபார விருக்தியும் குடும்ப ஒற்றுமையும் ஏற்படும்.
குளத்தில் கால் கழுவுவதை போல கனவு கண்டால், தரித்திரம் விலகி முகதில் புதிய உற்சாகம் ஏற்படும். நாள்பட்ட வியாதிகளால் ஏற்பட்ட பணவிரயமும், உடல் பலவீனமும் அகலும். ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி செல்வீர்கள்.
குளத்தில் இருக்கும்போது முதலை உங்கள் காலை பிடிப்பது போல கனவு கண்டால், எடுக்கும் முயற்சியில் வெற்றியை பெறுவீர்கள். இருந்தாலும் சிறிய பிரச்சனைகளையும் தடைகளையும் சந்திக்க நேரும். அதை மனதைரியத்தோடு சமாளித்தால் லாபகரமாக அமையும்.
குளத்தில் குளிப்பது போல கனவு கண்டால், இறைவனால் ஏற்படும் நன்மைகளை யாராலும் தடுக்க முடியாது. உங்களுக்கு கிடைக்கும் நற்பெயரும் வெற்றியும் யாராலும் பறிக்க இயலாது. அடுப்பு கரி வைரமாகும் ஆனால் வைரம் மறுபடியும் அடுப்புகரி ஆகாது. அதுபோல வெற்றியை பெற்ற நீங்கள் தோல்வியை சந்திக்க மாட்டீர்கள்.
தண்ணீரில் தத்தளிப்பது போல கனவு கண்டால், புதியதாக அறிமுகமான நட்பால் சிரமம் ஏற்படும். பணவிரயமும் உண்டாகும். நெருங்கிய உறவினர்களால் மனசங்கடங்கள் இருக்கும். திடீர் தனலாபமும் ஏற்படும்.
அருவியில் இருந்து தண்ணீர் கொட்டுவது போல கனவு கண்டால், பணவரவு இருக்கும். வேலையில் நல்ல முன்னேற்றமும் பதவி உயர்வும் ஏற்படும். சந்தோஷமான செய்திகள் கிடைக்கும். செல்வாக்கு உயரும்.
தண்ணீரில் உங்கள் வீடு இருப்பது போல கனவு கண்டால், செல்வம் உங்கள் இல்லம் தேடி வரும். உறவினர்களால் தொல்லையும் வீண் அலைச்சலும் ஏற்படும். நண்பர்களால் நன்மையும் பணவரவும் இருக்கும்.
தண்ணீரில் மூழ்குவது போல கனவு கண்டால், குழந்தைகளால் சந்தோஷம் ஏற்படும். பசுவை தேடி கன்று வருவது போன்று எப்போழுதோ செய்த நன்மைகளின் பலன்கள் உங்களுக்கு இப்போழுது கிடைக்கும்.
செடிகளுக்கும், மரங்களுக்கும் தண்ணீர் விடுவது போல கனவு கண்டால், உங்களுக்கு நன்மை செய்யவே பிறந்தவர்கள் போல் சிலர் உங்களை தேடி வந்து உதவுவார்கள். அவர்களால் மனம் குளிர்ச்சியடையும். புதிய முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.
களைப்பாக இருப்பது போல கனவு கண்டால், வெற்றிக்காக போராடி கொண்டு இருந்த நீங்கள், வெற்றி பெரும் காலத்தின் அருகில் சென்று கொண்டு இருக்கிறீர்கள் என்று உணருங்கள். அதற்கான முயற்சிகளை இன்னும் வேகமாகவும் விவேகமாகவும் செய்தால் வெற்றி கனி உங்கள் கையில்.
எல்லோரும் உறங்குவது போல கனவு கண்டால், அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறும் அந்தஸ்துக்கு வருவீர்கள். உயர்வான பலன்களை பெறுவீர்கள்.
வாகனத்தில் பயணம் செய்வது போல கனவு கண்டால், பொழுதுபோக்கான விஷயங்களில் அதிகம் பங்கு கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். புகழ் மங்கி இருந்தவர்கள் புகழின் உச்சிக்கே போவீர்கள்.
வாகனத்தை தள்ளி கொண்டு போவது போல கனவு கண்டால், பிரச்சனைகளில் இருந்து எப்படி விடுபடுவது என்று தெரியாமல் அவதிப்பட்டு கொண்டு இருப்பீர்கள். உங்களுக்கு உதவ சில நல்ல உள்ளம் படைத்தவர்கள் உதவி செய்ய முன் வருவார்கள்.
சிங்கம் உங்களை துரத்தி வருவது போல கனவு கண்டால், அரசாங்கத்தால் பிரச்சனை உண்டாகும். புதிய நபர்களின் ஆதரவினால் பெரிய பாதகத்தில் இருந்து தப்பிப்பீர்கள். நீண்ட நாட்களாக மனதில் இருந்த பயம் போகும்.
சிங்கத்தை தடவிவிடுவது போல கனவு கண்டால், விசேஷ லாப பலன்கள் உண்டாகும். முடியாமல் பல நாட்களாக இழுத்தடித்த வேலைகள் நீங்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு திருப்தியாக முடியும். அசையும் பொருட்களோ, அசையாத பொருட்களோ வாங்குவீர்கள். மனதில் புதிய உற்சாகமும், தெம்பும் ஏற்படும்.
சிங்கம் உங்களை கடிப்பது போல கனவு கண்டாலோ அல்லது உங்கள் குடும்பத்தாரை கடிப்பது போல கனவு கண்டாலோ, புத்திரர்களால் சில பிரச்சனைகள் உண்டாகும். அல்லது ஏதாவது வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தாலும், புத்திரர்களால் தடை உண்டாகும். துர்கை அம்மனை வணங்கினால் பாதகம் எல்லாம் சாதகமாகும்.
பாம்பை கனவில் கண்டால், தெய்வ பலன்கள் அதாவது உங்களின் நல்ல நேரத்தை விரைவிலேயே அனுபவிப்பீர்கள் ஆயுள் விருத்தியுண்டாகும். பெண்களால் ஆதாயம் ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்த உடல் உபாதைகள் விலகும். புதிய மருந்தால் உடல் வலிமை பெரும்.
பாம்பு உங்கள் உடலின் மேல் ஏறுவது போல கனவு கண்டால், பிரச்சனைகள் விலகும். தந்தை வழியில் மன சங்கடங்கள் ஏற்படும். வியபாரத்தில் இருந்த பண பிரச்சனை விலகும். மணவாழ்க்கையில் சில பிரச்சனை ஏற்பட்டாலும் பிறகு சுமுகமாக பிரச்சனைகள் விலகும்.
பாம்பு படம் எடுப்பது போல கனவு கண்டால், பொறமையாளர்களால் விரயம் ஏற்படும். பயணத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். நண்பர்களால் லாபம் ஏற்படும். இருந்தாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
யானையை கனவில் கண்டால், அரசாங்கத்தால் லாபமும், யோகமும் ஏற்படும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்தவழக்குகளுக்கு நல்ல விதமாகவும் உங்களுக்கு சாதகமாகவும் தீர்ப்பு கிடைக்கும்.
யானை உங்களை துரத்தி வருவது போல கனவு கண்டால், பழைய விவகாரங்களால் மனசங்கடங்களும், புதியதாக பிரச்சனைகளும் உருவாகும். அரசாங்கத்தால் தொல்லைகள் எழும். வில்லங்க விவகாரங்களில் சிக்கி திண்டாடுவீர்கள். இதனால் மனசஞ்சலம், கடன் சுமையும் உண்டாகும்.
யானை உங்களுக்கு மாலை போடுவது போல கனவு கண்டால், பெரிய பதவி கிடைக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். செல்வாக்கு உயரும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல இடத்திலிருந்து வரன் அமையும்.
யானை மீது நீங்கள் உட்கார்ந்து வருவது போல கனவு கண்டால், வேலைக்காக முயற்சி செய்து கொண்டு இருந்தால் வேலை கிடைக்கும். பதவியில் இருப்பவர்களுக்கு உயர் பதவி ஏற்படும். குடும்பத்தாரிடத்தில் – உறவினர்களிடத்தில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும்.
நீதி மன்றத்தை கனவில் கண்டால், நிதிக்காக எத்தனை வருடம் போராடுனீர்களோ அதற்கு கைமேல் பலன் கிடைக்கும். அது உங்களுக்கு சாதகமாகவும் மன திருப்தியாகவும் அமையும். கோர்ட்டு வழக்க இல்லாதவர்களுக்கு ஏதாவது வழியில் கோர்ட்டு படி ஏறும் நிலை வரும். ஆகவே எச்சரிக்கை உணர்வுடன் நடந்து கொள்வது நல்லது.
நீதிபதியை கனவில் கண்டால், உங்களுக்கு எதிராக வழக்கு தொடுத்தவரே உங்களிடம் சமாதானத்திற்கு வருவார்கள். வழக்குக்கு சம்மந்தம் இல்லாதவர்களிடத்தில் வழக்குக்கான ஆலோசனையை கேட்காமல் இருப்பது நல்லது.
வக்கீலிடம் உரையாடுவது போல கனவு கண்டால, பேச்சினால் எக்காரியத்தையும் சர்வசாதாரணமாக சாதிப்பீர்கள. வில்லங்கமான காரியத்தில் தலையிட நேரலாம். உங்களிடம் வீண் சண்டை போடவே சிலர் வருவார்கள். நீண்ட காலமாக ஏதாவது காரியத்திற்காக போராடி கொண்டு இருந்தால் அந்த காரியத்திற்கான தடைகள் விலகி வேலை கைக்கூடும்.
வக்கீலிடம் சண்டை போடுவது போல கனவு கண்டால், பெரிய ஆபத்தில் சிக்கி கொண்டு திணறுவீர்கள். வசதிகள் இருந்தாலும் அனுபவிக்க முடியாத சூழ்நிலை உண்டாகும். உறவினர்களிடத்தில் சண்டை போடும் நிலை வரும். அவர்களால் தொல்லையும் இருக்கும்.
நெருப்பு உங்களை சுற்றி எரிவது போல கனவு கண்டால், உடல் பலவீனத்தால் அவதிப்பட்டு இருப்பவர்கள் அந்த பலவீனம் இருக்கும் இடம் தெரியாமல் உங்கள் உடலுக்கு புதிய தெம்பும் பலமும் கிடைக்கும். உங்கள் செயலுக்கு யாராவது இடைஞ்சல் செய்து கொண்டு இருந்தால், இனி அவர்களால் தொல்லைகள் இருக்காது.
நெருப்பை பற்ற வைப்பது போல கனவு கண்டால், முன் கோபத்தால் பெரிய வாய்ப்பை நழுவவிடுவீர்கள். ஆகவே எதற்கும் கோபப்படாமல நிதானமாக சிந்தித்து பேசுவது நல்லது. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இல்லாமல் இருந்தால் லாபத்தை சம்பாதிப்பீர்கள்.