திருமண தடைய நீங்க ராகு தேஷம் உள்ளவர்கள் செய்யவேண்டிய பரிகார முறைகள்!

0
828

ஒருவருடைய ஜாதகத்தில் ராகு நன்மைகளைத் தரும் அமைப்பில் இருக்கும்போது அந்தஸ்து, கௌரவம், புகழ் உள்ளிட்டவைகளைக் கொடுத்து அனைத்திலும் வெற்றியைத் தருவார்.

அதோ வேளையில் ஜாதகத்தில் ராகு தேஷம் உள்ளவர்கள் உரிய காலகட்டங்களில் முறையான பரிகாரங்களை செய்வதன் மூலம் நற்பலன்களை நிச்சயமாக அடைய முடியும்.

அந்தவகையில் ராகுவால் ஏற்படும் தேஷங்களில் இருந்து எளிதில் விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளை பின்பற்றினாலே போதும். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

தினசரி விரதம் இருந்து துர்க்கை அம்மனுக்குரிய ஸ்தோத்திரங்களை படித்து வர வேண்டும். செவ்வாய் கிழமைகளில் விரதம் இருந்து துர்க்கைக்கு எலுமிச்சை விளக்கு ஏற்ற வேண்டும்.

தினசரி அரசு, வேம்பு மரத்தடியில் உள்ள விநாயகர், நாகர் சிலைகளை 9 தடவை வலம் வர வேண்டும்.துர்க்கைக்கு அவர்கள் இருக்கும் கிரக வீட்டின் அதிபர்கள் கிழமைகளில் அர்ச்சனை செய்ய வேண்டும்.

நவக்கிரக பீடத்தில் உள்ள ராகு பகவானை தினசரி விரதம் இருந்து வலம் வர வேண்டும். பிரச்சனையின் தீவிரத்திற்கு ஏற்ப 9, 27, 108 என சுற்றுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இவ்வாறு 48 நாட்கள் விரதம் இருந்து வலம் வர தோஷங்கள் யாவும் நீங்கும்.

ராகு பகவானுக்குரிய தியான மற்றும் காயத்ரி அஷ்டோத்திர மந்திரங்களை தினமும் ஒரு முறையாவது சொல்லி வர வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here