கோயிலுக்கு செல்லும்போது அசைவம் சாப்பிட்டுவிட்டு போகக்கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள். அவர்கள் கூறும்போது அதை மறுத்து தர்க்கம் செய்யும் பலரை பார்த்திருப்போம். அசைவம் சாப்பிட்டுவிட்டு ஏன் கோயிலுக்கு போகக்கூடாது என்பதை அறிவியல்பூர்வமாக பார்போம் வாருங்கள்…
நாம் உண்ணும் உணவு நம் உடலில் பல மாற்றங்களை உண்டாக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். உதாரணமாக பொங்கல் சாப்பிட்டால் மந்தமாகவும், காரம் அதிகம் சாப்பிட்டால் கோவம் அதிகம் வருவதையும் நாம் கண்கூடாக காணலாம். பொதுவாக அசைவ உணவு நம் உடலால் ஜீரணமாக 12 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஜீரணமாகாத உணவு உடலளவில் அதிக மந்தநிலையை ஏற்படுத்தும்.
உடலளவில் மந்தநிலையில் இருக்கும் ஒருவரால் கோயிலில் நிலவும் சூட்சும சக்திகளை உணரும் ஆற்றலை இழந்துவிடுகின்றார். எனவேதான் அசைவ உணவை சாப்பிட்டுவிட்டு கோயிலுக்கு செல்லக்கூடாது என்று முன்னோர்கள் கூறுகின்றனர். ஒருவேளை தவிர்க்க முடியாத சூழலில் அசைவம் சாப்பிட்ட பின் கோயிலுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால் சாப்பிட்ட மூன்று மணி நேரத்திக்கு பின் குளித்துவிட்டு சென்றால் கோயிலில் நிலவும் சூட்சும அதிர்வுகளை உணரமுடியும்.