தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் குறித்த பதிவை சமீபத்தில் வெளியிட்டிருந்தோம், இதனை தொடர்ந்து நடந்து முடிந்த 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்த பதிவை நாங்கள் முன்பே கணித்து வைத்திருந்த நிலையில் சில வாசகர்கள் இந்த கணிப்பு வாக்காளர் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருத்து தெரிவித்திருந்தனர். எனவே இடைத்தேர்தல் குறித்த இந்த கணிப்பு எந்தவிதத்திலும் யாருடைய மனநிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்த கூடாது என்பதற்காக தேர்தலுக்கு பின்னர் இந்த கணிப்பை வெளியிடுகிறோம்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் அதிமுக அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக இருந்த 18 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலோடு சேர்த்து நடத்தப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் 8 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் தான் இந்த ஆட்சியை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தக்க வைத்துக்கொள்ள முடியும் என்ற சூழலில் இந்த ஆட்சி நீடிக்குமா, அல்லது கலையுமா என்ற பெரும் எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவி வருகிறது.
இந்த இடைத்தேர்தலில் தொகுதிவாரியாக யார் வெற்றிபெறுவார்கள் என்று சேலத்தை சேர்ந்த ஜோதிட நிபுணர் பாலாஜி ஹாசன் அவர்கள் இந்த கணிப்பை கணித்து வெளியிட்டுள்ளார். அந்த கணிப்பு நமது வாசகர்களுக்காக.
இந்த கணிப்பின் மூலம் எடப்பாடி பழனி சாமி ஆட்சி நீடிப்பதற்கு தேவையான பலம் அவருக்கு கிடைக்கப்பெறும் என்று பாலாஜி ஹாசன் தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் தோல்வியை தழுவினாலும் டிடிவி தினகரனுக்கு இந்த தேர்தலுக்கு பிறகு பலம் அதிகரிக்கும் பல சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் அவரை நேரடியாகவும் மறைமுகமாகவும் சந்திப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
பாலாஜி ஹாசனை நேரடியாக தொடர்புகொள்ள விரும்புபவர்கள் அவரின் முகநூல் முகவரி மூலம் தொடர்புகொள்ளலாம்…
https://www.facebook.com/balajihaasan
பாலாஜி ஹாசனின் கணிப்பில் ஏற்கனவே வெளியிடப்பட்ட 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கான கணிப்பை படிக்க லிந்த லிங்கை கிளிக் செய்யவும்.
40 தொகுதியிலும் வெற்றிபெறப்போவது யார்? பிரபல ஜோதிடரின் கணிப்பு