அடகு வைத்த நகையை விரைவில் மீட்க இந்த பரிகாரம் செய்தால் போதும்…!

நம் அனைவருக்குமே வாழ்வில் ஏதாவது ஒரு சமயம் பண நெருக்கடியான நிலை உண்டாகிறது. இப்படிப்பட்ட சமயங்களில் நமக்கு தேவையான அளவு பணம் கிடைக்க நமக்கு சொந்தமான நகை, வீடு, நிலம், வாகனம் போன்றவற்றை அடகு வைத்து பணம் பெறுகிறோம்.
இப்படி அடகு வைத்து பணம் பெற்ற பலர் தங்களின் பரம்பரை சொத்தாக இருந்த மேற்கூறிய நகை, நிலம், வீடு போன்றவற்றை மீட்க முடியாமலே போன நிலை ஏற்பட்டிருக்கிறது.

அடகு வைக்கப்பட்ட உங்களின் சொந்த வீடு, நிலம், நகைகள் போன்றவற்றை சீக்கிரம் மீட்க ஒரு வெள்ளை தாளில் அடகு கடை அல்லது வங்கியின் பெயர் அடகு எண், அடகு வைத்த தேதி, அடகு பொருள் ஆகியவைகளை தெளிவாக எழுதி, பூஜை அறையில் காமாட்சி விளக்கேற்றி அதன் பாதத்தில் அடகு தகவல்கள் அடங்கிய அந்த காகித தாளை வைத்து வணங்கி விட்டு பிறகு பொருளின் பெயரை மட்டும் கூறி அதோடு “வர வர ஸ்வாகா” என்று 108 முறை உச்சரிக்கவும் உதாரணமாக “1 பவுன் சங்கலி 1/2 பவுன் கம்மல் வர வர ஸ்வாகா, 3 சென்ட் நிலம், 1 ஏக்கர் நிலம் வர வர ஸ்வாகா” என்று கூறி துதிக்க வேண்டும்.

இந்த பரிகார பூஜை செய்பவர் மாதத்தில் வரும் அவரின் பிறந்த நட்சத்திரம் அன்று தொடங்கி செய்து வர வேண்டும். பிறகு வாரம் தோறும் வெள்ளிக்கிழமை மாலை 6 முதல் 7 மணிக்குள் செய்ய வேண்டும். தங்களின் பிறந்த நட்சத்திரம் தெரியாதவர்கள் வெள்ளிக்கிழமை அன்று இந்த பரிகார பூஜையை தொடங்க வேண்டும்.

மூன்று பௌர்ணமி தினத்தன்று நீங்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோயிலில் இருக்கும் பைரவர் சந்நிதியிலோ அல்லது பைரவர் கோயிலிலோ பைரவரை செவ்வரளி பூக்கள் சமர்ப்பித்து, விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி பைரவரை மனமுருக வழிபட்டு வந்தால் உங்களின் செல்வ சேமிப்பு நிலை உயர்ந்து, கூடிய விரைவில் நீங்கள் அடகு வாய்த்த நகை, நிலம், வீடு, வாகனம் போன்ற எதையும் மீட்டுவிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*