நடைபெறவிருக்கும் நாற்பது பாராளுமன்ற தேர்தலிலும் எந்தெந்த கட்சி எந்தெந்த தொகுதிகளில் வெற்றிபெறப்போகிறது என்று ஒவ்வொரு செய்தி நிறுவனங்களும் கருத்துக்கணிப்பு வெளியிட்டு வருகின்றது. இந்நிலையில் சேலத்தை சேர்ந்த பிரபல ஜோதிட வல்லுநர் பாலாஜி ஹாசன் 40 தொகுதிகளிலும் யார் வெற்றிபெற போகிறார்கள் என்று ஜோதிட ரீதியிலான கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் ஏற்கனவே கர்னாடக தேர்தலில் பாஜக வெற்றிபெறும், காங்கிரஸ் வெற்றிபெறும் என்று ஊடகங்கள் கணித்துவந்த வேளையில் குமாரசாமி ஆட்சியமைப்பார் என்று கணித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியவராவார், அதே போல் பாகிஸ்தான் தேர்தலில் மிக சொற்பமான தொகுதிகளிலேயே நின்ற இம்ரான்கான் ஆட்சியமைப்பார் என்று மிகச்சரியாக கணித்தவராவார்.
வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கே விரைவில் தேர்தல் நடைபெறும் என்றும் அதில் திமுகவே வெற்றிபெறும் என்று திரு பாலாஜி ஹாசன் தெரிவித்துள்ளார்.
பாலாஜி ஹாசனின் முகநூல் முகவரி
https://www.facebook.com/balajihaasan