உலகில் உள்ள அனைத்து உயிர்களின் நலன்களுக்காக தங்களை வருத்தி அரும்பாடுபட்டு பல அற்புத கலைகளை உருவாக்கியவர்கள் சித்தர்கள். விஞ்ஞான அறிவியலாளர்களால் இன்றளவும் கண்டறிய முடியாத பல அற்புதங்களை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்து உலகிற்கு வெளிப்படுத்திய மேன்மையாளர்கள் அவர்கள். தங்களின் உடல்களை பூமியன் பல்வேறு இடங்களில் ஜீவ சமாதியாக்கி தங்களின் சூட்சும சக்திகளை உலகம் முழுவதும் நிலைநிறுத்தி உலகிற்கு நன்மை செய்பவர்கள். தங்களை முழுமையாக நம்புபவர்களை ஒருபோதும் கைவிடாதவர்கள். அப்படிப்பட்ட சித்தர்களின் மந்திரத்தை நாம் ஜபித்து வந்தால் அவர்களின் அருளை பெற்று நம் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற முடியும்.
கீழ்கண்ட மந்திரத்தை பக்தியோடு கூறிவந்தால் முதலில் அருட்செல்வமும் பிறகு பொருட்செல்வமும் கிடைக்கப்பெறுவீர்கள்.
ஓம் அகத்தீசாய நம!
ஓம் கருவூர்தேவாய நம!
ஓம் போகதேவாய நம!
ஓம் கோரக்கதேவாய நம!
சித்தர்களின் ஆசியை பெறவேண்டும் என்று நினைத்தால் அதற்கு அடிப்படை தகுதியே அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தும் அப்பழுக்கற்ற மனம் தான். எவருக்கும் மனதளவிலும் தீங்கு நினைக்காமல் மேலே குறிப்பித்த மந்திரத்தை தினமும் ஒருமுறையேனும் ஜபித்து வந்தால் சித்தர்கள் நிச்சயம் நம்மை வழிநடத்துவார்கள்.