உயிருக்கு போராடும் மாணவிக்கு உதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.

அரிய வகை தோல் நோயால் அவதிப்படும் 12ம் வகுப்பு மாணவியின் உயிரைக் காப்பாற்றுவதற்கு எதுதர்மாவின் https://www.edudharma.com/campaigns/helppooja என்ற இணையதளம் மூலம் நிதி திரட்டப்பட்டு வருகிறது.

திருப்பூரைச் சேர்ந்தவர் பூஜா ஷண்மதி. திருப்பூரில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் பூஜாவுக்கு, கடந்த 1-ம் தேதி திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. உடல் மிகவும் சோர்வடைந்து காணப்பட்டார். உடனடியாக அவரை அவரது பெற்றோர், அருகில் உள்ள தனியார் கிளினிக்கிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, சில மருந்து மாத்திரைகளும் கொடுத்துள்ளனர். ஆனால் காய்ச்சல் குறையவில்லை.

மறுநாள் காய்ச்சல் அதிகரித்ததுடன், உடல் முழுவதும் அம்மை நோய் போன்று சிறுசிறு கொப்பளங்கள் தோன்றின. இதனால் பயந்துபோன பெற்றோர், 3-ம் தேதி கோவை ராமநாதபுரத்தில் உள்ள என்.எம். மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நான்கு நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

பூஜாவுக்கு அரியவகை தோல் நோய் பாதிப்பு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அத்துடன், நவீன மருத்துவ வசதிகள் கொண்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் உயிரைக் காப்பாற்றலாம் என்றும் அறிவுரை கூறினர். இதனால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த பெற்றோர், பாசமாக வளர்த்த மகளின் உயிரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என துடித்தனர்.

டாக்டர்களின் அறிவுரையின்பேரில் கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பூஜாவின் உடல்நிலையை நன்கு பரிசோதித்த டாக்டர்கள், தோல் நோயின் தீவிரத்தை குறைப்பதற்காக சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர் சிகிச்சை என்பதால் செலவும் அதிகமானது.

தங்கள் சக்திக்கும் மீறி இதுவரை 2.5 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளனர். இன்னும் எவ்வளவு செலவு ஆகும்? எத்தனை நாள் சிகிச்சை பெற வேண்டும்? என்பது போன்ற விவரங்களை மருத்துவமனை நிர்வாகத்தால் உறுதியாக சொல்ல முடியவில்லை. குறைந்தபட்சம் 5 லட்சம் முதல் 6 லட்சம் வரை செலவாகும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மருத்துவ செலவை சமாளிக்க முடியாமல் திணறும் பூஜாவின் பெற்றோர், தங்கள் மகளை காப்பாற்ற நன்கொடையாளர்களின் உதவியை நாடியுள்ளனர். நீங்கள் செய்யும் ஒவ்வொரு ரூபாய் நன்கொடையும், மருத்துவமனையில் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் பூஜாவின் மறுவாழ்விற்கு உதவியாக இருக்கும்.

பூஜாவின் உயிரைக் காப்பாற்ற உதவி செய்ய விரும்புவோர்,

https://www.edudharma.com/campaigns/helppooja

என்ற எதுதர்மா அறக்கட்டளையின் இணையதள முகவரியில் சென்று நன்கொடை செலுத்தலாம். வங்கி பரிமாற்றம் மூலமாகவும் பணத்தை அனுப்பலாம்.

அக்கவுண்ட் நம்பர் – 2223330091363906
பயனாளியின் பெயர் – பூஜா ஷண்மதி
ஐஎப்எஸ்சி – YESB0CMSNOC

வங்கி கணக்கிற்கு பணப்பரிமாற்றம் செய்தால், அது தொடர்பான குறிப்பெண், உங்கள் பெயர், இ-மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணுடன், ask@edudharma.com என்ற முகவரிக்கு தகவல் அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் தொடர்புக்கு:-

எதுதர்மா (அறக்கட்டளை பதிவு எண்) 12 A: 1419(32)80-91 மற்றும் 80- G-1419(32)/CIT-1/CBE/08-09

எதுதர்மா,
ரத்னம் டெக்சோன்,
பொள்ளாச்சி மெயின் ரோடு,
ஈச்சனாரி,
கோயம்பத்தூர்,
தமிழ்நாடு- 641021

+919600111639
+919087766633

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*