கற்றாழை மிகவும் அற்புதமான மூலிகைப் பொருள். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இது உடல் ஆரோக்கியம் முதல் சருமம், தலைமுடி போன்றவற்றின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த வல்லது. தலைமுடி அதிகம் உதிரும் பிரச்சனை உள்ளவர்கள், கற்றாழை ஜெல்லைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்தால், தலைமுடி உதிர்வது நின்றுவிடும்.
அதற்கு கற்றாழை ஜெல்லை நேரடியாகவோ அல்லது அதனைக் கொண்டு எண்ணெய் தயாரித்தோ பயன்படுத்தலாம். ஆனால் கற்றாழை எண்ணெய் தயாரித்து வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தினால், மூன்றே மாதங்களில் தலைமுடி நன்கு வளர்ந்திருப்பதைக் காணலாம். கற்றாழை எண்ணெயை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்று இன்று நாம் பார்ப்போம்
இதற்க்கு தேவையான பொருட்கள்: கற்றாழை இலை – 1 (2-4 இன்ச் நீளமுள்ளது) தேங்காய் எண்ணெய் – 50 மிலி
முதலில் கற்றாழை இலையில் உள்ள ஜெல்லை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுக்கும் போது அதில் உள்ள மஞ்சள் நிற பகுதியை தப்பித்தவறியும் எடுத்துவிட வேண்டாம்.
பின் ஒரு பௌலில் கற்றாழை ஜெல் மற்றும் தேங்காய் எண்ணெயை ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து, 2-3 நாட்கள் ஊற வைக்க வேண்டும்.
பின்பு ஊற வைத்துள்ள கற்றாழை ஜெல் கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, குறைவான தீயில் 10-15 நிமிடம் நன்கு