பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நடிகை ஓவியாவிற்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம்… சாரி “ஆர்மி” கிடைத்தது. அதன் பிறகு ஓவியா நடிப்பில் வெளியாகும் முதல் படம் 90ml. டிரைலரே பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது. இந்த படம் எப்படி? வாங்க பாப்போம்..
ரீடா (ஓவியா) சென்னையில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்புக்கு கையில் சிகரெட்டுடன் மாஸாக வந்திறங்குகிறார். திருமணம் செய்து கணவருடன் வரவில்லை, அவர் வந்திருப்பதோ தற்காலிக காதலருடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கதான் என்பதை பார்க்கும் அந்த அபார்ட்மெண்ட் பெண்களுக்கு அதிர்ச்சி.
அந்த பெண்கள் குடும்பம், கணவர் என வாழ்க்கையை ஓடிக்கொண்டிருக்கின்றனர். நான்கு பெண்கள் ஓவியாவுடன் நெருக்கமாக பழகுகின்றனர்.
அந்த பெண்களுள் ஒருவருக்கு பிறந்தநாள் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்கிறார் ஓவியா. அப்போது குடிக்கும் அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் பற்றி பேசுகின்றனர்.
பீர், வைன், கஞ்சா என பல ரௌண்டுகள் தாண்டி இந்த பார்ட்டி தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இடையில் தன் பாய்ப்ரெண்டுடன் பிரேக்அப் செய்கிறார் ஓவியா.
அபார்ட்மெண்ட் தோழிகள் தங்களுக்கு உள்ள பிரச்சனைகளை ஓவியா கொடுக்கும் தைரியத்தை வைத்து எப்படி எதிர்கொள்கிறார்கள். ஓவியாவிற்கு புதியா காதலர் கிடைத்தாரா என்பது தான் மீதி கதை.
ஓவியா – அவரா இப்படி? என நம்மை யோசிக்கவைக்கும் அளவுக்கு படம் துவங்கியது முதல் கிளிமாக்ஸ் காட்சி வரை நம்மை அதிர்ச்சியிலேயே வைத்திருக்கிறார். அவருக்கு தோழிகளாக நடித்த பெண்கள் தங்கள் ரோலை கச்சிதமாக செய்துள்ளனர்.
குடிப்பழக்கம் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என மற்ற படங்களில் டைட்டில் கார்டில் வரும், படத்தின் இடையில் ஏதோ ஒரு இடத்தில் அதிகபட்சம் இருக்கும். ஆனால் 90ml படம் பெயருக்கு தகுந்தாற்போல குடிக்கும் காட்சிகள் இருப்பதால் இந்த படம் முழுவதும் அந்த வாசகம் தான் இடம் பெற்றுள்ளது.
மேலும் கவர்ச்சிக்கு படம் முழுவதும் பஞ்சம் இல்லை. அரைகுறை ஆடைகள் தான் படம் முழுவதும். நல்ல வேலை கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் விஷயங்களை திரையில் காட்டுவதில் மட்டும் அளவோடு நிறுத்தியுள்ளார் இயக்குனர் அனிதா உதீப்.
லிவ் இன் ரிலேஷன்ஷிப், லெஸ்பியன் காதல், கட்டாய அரெஞ் மேரேஜால் வரும் பிரச்சனை உட்பட பல விஷயங்களை தைரியமாக திரையில் காட்டியது பிள .
பெண்களும் சுதந்திரமாக தைரியமாக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என காட்டியிருந்தாலும், அதற்காக குடிப்பது-கஞ்சா அடிப்பது போன்ற விஷயங்களை நியாயப்படுத்தி காட்டியிருப்பதுமைனஸ்.
மொத்தத்தில், 90ml ஒரு அமெரிக்க வெப் சீரிஸ் பார்த்த பீல். இந்திய கலாச்சாரத்திற்கு பொருந்துமா?