அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 91-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. காலை 7 மணியளவில் துவங்கிய இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் இன்றி நடந்து வருகிறது.
சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதை ”கிரீன் புக்” திரைப்படம் பெற்றது. பீட்டர் ஃபரோலி இயக்கிய இந்த படம் அமெரிக்கா பியானோ இசைக்கலைஞர் டான் ஷிரோலியின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. கிரீன் புக் திரைப்படம் மூன்று ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த படம், சிறந்த துணை நடிகர், சிறந்த திரைக்கதை ஆகிய பிரிவுகளில் வென்றுள்ளது.
கோவையைச் சேர்ந்த நாப்கின் உற்பத்தியாளர் முருகானந்தம், மலிவு விலையில் நாப்கின்களை அறிமுகப்படுத்தினார். அவ்வப்போது பல இடங்களுக்கு சென்று பெண்களிடையே கலந்துரையாடி விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றார்.
இவரது மலிவு விலை நாப்கின்கள் மற்றும் இந்திய பெண்கள் மாதவிடாய் காலத்தில் படும் அவதிகளை எடுத்துச் சொல்வதை மையமாகக் கொண்டு ஆவணக் குறும்படமாக ‘பீரியட்- எண்ட் ஆஃப் சென்டன்ஸ்’ எனும் பெயரில் கடந்த ஆண்டு வெளியானது. இப்படத்தினை குனேட் மோங்கா தயாரித்திருந்தார்.
இப்படம் இந்த ஆண்டிற்கான சிறந்த ஆவணக் குறும்படமாக ஆஸ்கர் விருது விழாவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மலிவு விலை நாப்கின் உற்பத்தியாளர் முருகானந்தம் கூறுகையில் பள்ளிக் கல்வியில் மாதவிடாய் சுகாதாரம் குறித்த பாடத்தைக் கொண்டுவர வேண் டும். நான் கண்டுபிடித்த நாப்கின் தயாரிப்பு இயந்திரம், பராமரிக்க மிகவும் எளிதானது. 99 சதவீதம் பஞ்சுதான் பயன்படுத்தப்படுகிறது. ஆர்கானிக் முறையிலான நாப் கினை, குறைந்த விலையில் வழங்குவது தொடர்பான ஆராய்ச் சியில் தற்போது ஈடுபட்டுள்ளோம். மின்சாரம் இல்லாமல் இயங்கும் இயந்திரத்தை உருவாக்க முயற் சித்து வருகிறேன்.
காதுகேளாத, வாய் பேசாத பெண்கள், நாப்கினை தயாரிக்கும் வகையிலான இயந்திரத்தையும் நான் வடிவமைத்துள்ளேன். சென் னையில் வரும் மார்ச் 8-ம் தேதி இந்த இயந்திரம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இதன் மூலம் ஒரு இயந்திரத்துக்கு 20 பேர் வேலைவாய்ப்பு பெறுவர். ‘இந்த படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைப்பதன் மூலம் சர்வதேச அளவில் மாதவிடாய் குறித்து விழிப்புணர்வு ஏற்படும்’ என கூறினார். இப்படத்தில் முருகானந்தம் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.