இந்த விநாயகர் சிலையை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகுவது உறுதி

இயற்கையிலேயே வெள்ளெருக்கு செடி தெய்வீக சக்திகள் கொண்ட செடியாக ஆன்மிக ரீதியில் கருதப்படுகிறது. விநாயகருக்கு விருப்பமான மலராக வெள்ளெருக்கு பூ சூட்டி வழிபடப்படுகிறது.

எருக்கஞ்செடி குடும்பத்தைச் சேர்ந்தது வெள்ளெருக்கு. நீல எருக்கு, ராம எருக்கு என ஒன்பது வகையான எருக்குகள் இருக்கின்றன.

எருக்கஞ்செடி 12 ஆண்டுகள் கூட மழையில்லாமல் இரவில் பெய்யும் பனியை கொண்டே வளரும் தன்மை கொண்டதாகும். எருக்கஞ்செடி வகையில் வெள்ளெருக்குக்கு ஆன்மிக ரீதியிலும் மருத்துவ ரீதியிலும் பல்வேறு சக்திகள் இருப்பதாக கருதப்படுகிறது. வெள்ளெருக்கு நாரை கொண்டு திரிக்கப்படும் திரியில் தீபமேற்றினால் வீட்டிலிருக்கும் அனைத்து துஷ்ட சக்திகளும் விலகி ஓடும்.

வெள்ளெருக்கு செடியில் வடக்கில் செல்லும் வேரை முறையாக சாப நிவர்த்தி செய்து காப்பு கட்டி எடுத்துவந்து செய்யப்படும் விநாயகர் சிலையை வீட்டில் வைத்து வழிபட்டு வந்தால் பல்வேறு இடையூறுகளிலிருந்து நம்மை காக்கும். வெள்ளெருக்கு விநாயகர் இருக்கும் வீட்டில் நேர்மறை சக்தி அதிகரித்து வீட்டில் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும் என்பது கண்கண்ட உண்மை.

ஆனால் பலர் வெள்ளெருக்கு விநாயகர் என்ற பெயரில் ஏதோ ஒரு மரத்திலோ அல்லது முறையாக சாபநிவர்த்தி செய்யாமல் வெள்ளெருக்கு வேர்ப்பகுதிக்கு பதில் தண்டுப்பகுதியில் விநாயகர் செய்து பணத்திற்காக விற்று மக்களை ஏமாற்றுகின்றனர்.

வெள்ளெருக்கு விநாயகரை தாங்களே செய்ய நினைப்பவர்கள். சரியான வெள்ளெருக்கஞ் செடியை இனம்கண்டு. சாப நிவர்த்தி செய்து அதன் வடக்கில் செல்லும் வேரை எடுத்து வந்து ஆசாரியை வைத்து விநாயகர் செய்து கொள்ளுங்கள்.

இப்படி செய்த விநாயகரை ஒரு வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணிக்குள் ராகுகாலத்தில் சிலைக்கு அரைத்த மஞ்சளை தடவி நிழலில் காயவைக்க முடியும். பின் ஒரு வாரம் கழித்து அடுத்த வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12.00 மணிக்குள் ராகுகாலத்தில் அசல் சந்தனத்தை அரைத்து சிலையில் பூசி நிழலில் காயவைக்க வேண்டும். இப்படி செய்துவருவதன் மூலம் வேரில் ஏதேனும் தோஷம் இருந்தால் நீங்கி சிலையிலிருந்து நல்ல கதிர்வீச்சு வெளிப்படும். இந்த விநாயகர் சிலையை வீட்டில் வைத்து தினமும் பூஜை செய்து வந்தால் வீட்டில் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*