காளி என்று சொன்னாலே உக்கிரமான தெய்வம் என்று எல்லோரும் வீட்டில் வழிபட தயக்கம் காட்டுகின்றனர். காளியின் படத்தை வீட்டில் வைக்க கூட பயந்து தவிர்த்துவிடுகின்றனர். ஆனால் கலிங்கத்து பரணியிலும், புறப்பொருள் வெண்பாமாலை என்ற இலக்கண நூலிலும் காளி வழிபாட்டின் சிறப்புகள் குறித்தும், காளியை வழிபடுவதால் வாழ்கையில் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பல்வேறு தகவல்கள் நிறைந்துள்ளன.
காளிக்கு கொற்றவை, துர்கை, சாமுண்டி என்று பல பெயர்கள் உள்ளன. வீட்டில் உக்கிரமான வடிவிலிருக்கும் காளியின் படத்தை தான் வைத்து வணங்கக்கூடாதே தவித்து சாந்தமான வடிவிலிருக்கும் காளியின் படத்தை வைத்து வணங்குவதில் எந்த தவறும் இல்லை.
காளிகாதேவி காயத்ரி மந்திரம்: காளி காயத்திரி மந்திரம்.
ஓம் காளிகாயை ச வித்மஹே
ஸ்மசான வாசின்யை தீமஹி
தன்னோ கோரா ப்ரசோதயாத்
இந்த மந்திரத்தை திங்கள் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்லத் தொடங்குவது உத்தமமாகும். அமாவாசை தினத்தில் தொடங்கினால் மேலும் சிறப்பு. இந்த மந்திரத்தை 108 முறை மனதிற்குள் சொல்லி தியானித்து வந்தால் கேட்டது அனைத்தும் கிடைக்கும். இந்த மந்திரத்தை சொல்லத் துவங்கும் முன் விநாயகரை வணங்கி பூஜை செய்துவிட்டு பிறகு ஜெபிக்க வேண்டும்.
காளி பூஜையை ஒன்பது வெள்ளிக்கிழமைகள் செய்து வந்தால் வீட்டில் சகல காரிய சித்தியும் சர்வ மங்களங்களும் உண்டாகும்.