திருப்பதி கோயிலில் இருக்கும் பலகோடி மதிப்பிலான இரகசியமான தங்க கிணறு பற்றி தெரியுமா?

திருப்பதி ஏழுமலையான் என்று சொன்னாலே பல்வேறு அற்புதங்களும் ஆச்சர்யங்களும் தான் நம் நினைவுக்கு வரும். ஏழுமலையானின் அற்புதங்களை எத்தனை முறை படித்தாலும், எத்தனை முறை பேசினாலும் நமக்கு அலுப்பதே இல்லை. திருப்பதியில் இன்றுவரை வெளியுலகிற்கு தெரியாத பல மர்மங்கள் நிலவி வருகிறது அந்த வரிசையில் திருப்பதி கோயில் இருக்கும் திருமலையில் இரண்டு தங்க கிணறுகள் இருக்கும் ரகசியம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.

திருமலையில் இருக்கும் ஏழுமலையானின் கோயிலின் உள்ளே உள்ள விமான பிரகாரத்தில் தங்க கிணறு உள்ளது. புனித நீராக கருதப்படும் இந்த கிணற்று நீரை பயன்படுத்தி தான் 33 ஆண்டுகளுக்கு முன் வரை வெங்கடேச பெருமாள் சிலைக்கு அபிஷேகம் செய்வதும், லட்டு பிரசாதம் தயாரிப்பதற்கான நீரும் பயன்படுத்தப்பட்டது.

உலகிலேயே தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஒரே கிணறான இந்த கிணற்றிலிருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நீர் இறைத்து ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதை ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த கோயில் கிணறு முறையற்ற பராமரிப்பு மற்றும் திருப்பதி கோயிலை சுற்றி உருவான வீடுகளிலிருந்து முறையற்ற வகையில் பூமியில் கலக்கப்பட்ட சாக்கடையின் காரணமாக மாசடைந்து பயன்பாட்டுக்கு தகுதியற்றதாக மாறிவிட்டது. நீரை சுத்திகரிக்க கிணற்றில் கலக்கப்பட்ட கெமிக்கல்கள் ஏழுமலையானின் சிலையை செதப்படுத்தலாம் என்ற சந்தேகத்தை தேவஸ்தான ஊழியர்கள் எழுப்பியதால் கடந்த 33 ஆண்டுகளுக்கு முன் இந்த கிணற்று நீரால் ஏழுமலையானுக்கு செய்யப்படும் அபிஷேகம் கைவிடப்பட்டது.

ஆனால் உலகையே ஆச்சர்யப்படுத்தும் விதமாக எந்தவித முயற்சியும் இல்லாமலேயே இந்த கிணற்று நீர் தற்பொழுது பயன்பாட்டுக்கு உகந்ததாக மாறியுள்ளது ஆச்சர்யப்படும் தகவலாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*