கிருஷ்ணர் தினமும் நேரில் வந்து உணவு உண்ணும் அதிசய கோயில் பற்றி உங்களுக்கு தெரியுமா?

அமானுஷ்யங்களும் ஆச்சர்யங்களும் நிறைந்த பல்வேறு கோயில்கள் இந்தியாவெங்கும் நிறைந்திருக்கிறது. அந்த வரிசையில் கிருஷ்ணரும் ராதையும் தினமும் இரவில் வந்து ஆடி பாடி உணவு உண்ணும் அதிசய கோயிலை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

உத்திரபிரதேச மாநிலத்தில் மதுரா மாவட்டத்தில் உள்ளது பிருந்தாவனம் எனும் ஊர். இதை ஹிந்திரில் விருந்தாவன் என்றும் அழைக்கின்றனர். மகாபாரத இதிகாசத்தில் கிருஷ்ணர் தனது குழந்தை பருவத்தில் ஆடி பாடி விளையாடிய இடமாக குறிப்பிடப்படும் இந்த இடத்தில் ஐயாயிரத்திற்கும் அதிகமான கிருஷ்ணர் ராதை கோயில்கள் நிறைந்துள்ளன.

இதில் மிக முக்கியமாக இங்குள்ள நிதிவனம் என்ற காட்டிற்குள் அமைந்துள்ளது ரங் மகால் எனும் கோயில் இங்குள்ள அனைவராலும் பயபக்தியுடன் வணங்கப்படுகிறது. ஏனென்றால் இந்த கோயிலும் இந்த கோயிலிருக்கும் இடமான நிதிவனமும் பல அற்புதங்களை அமானுஷ்யங்களையும் தன்னுள் மறைத்து வைத்திருக்கும் இடமாகும்.

மிகவும் வரட்சியான காட்டுப்பகுதியான இந்த நிதி வனத்தில் நீரை பார்ப்பதே மிகவும் அரிதாகும். ஆனாலும் இங்குள்ள மரங்கள் அனைத்தும் எப்பொழுதும் பச்சை பசேலென்று காணப்படுவது மிகவும் ஆச்சர்யமாகும். இதைவிட இந்த கட்டில் இருக்கும் எந்த மரங்களும் நேராக வளராமல் கிருஷ்ணருக்கும் ராதைக்கும் மரியாதை செலுத்தும் விதமாக நன்றாக வளைந்தே வளர்ந்து காணப்படுகிறது மற்றொரு ஆச்சர்யமாகும். மேலும் இந்த காட்டை சுற்றி துளசி செடிகள் மிகுந்து காணப்படுகிறது. இந்த துளசி செடிகள் அனைத்தும் ஜோடி ஜோடியாகவே வளர்வது மற்றொரு ஆச்சர்யமாகும். இந்த துளசி செடிகள் அனைத்தும் கிருஷ்ணருடன் சிறுவயதில் வாழ்ந்த கோபியர்கள் என்று நம்பப்படுகிறது.

இந்த காட்டிற்குள் இருக்கும் ரங் மகால் எனும் கோயிலுக்கு நாள் தவறாமல் கிருஷ்ணரும் ராதையும் வந்து ஆடி பாடி உணவருந்திவிட்டு செல்வதாக உறுதியாக இப்பகுதி மக்களால் நம்பப்படுகிறது.

இந்த கோயிலில் சந்தன மரத்தால் செய்யப்பட்ட கட்டில் உள்ளது, கட்டிலுக்கு அருகில் ஒரு கலசத்தில் நீரும், கிருஷ்ணர் பல் துலக்குவதற்காக வேப்பங்குச்சியும், கிருஷ்ணர் தரிப்பதர்காக வெத்தலை பாக்கும் ஒவ்வொரு இரவும் வைக்கப்படுகிறது. இரவு 7 மணி பூஜைக்கு பிறகு பக்தர்கள், பூஜை செய்பவர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த காட்டுப்பகுதியை விட்டு வெளியேறிவிடுகின்றனர். ஆச்சர்யப்படும் வகையில் பகலில் இந்த காட்டுப்பகுதியில் காணப்படும் விலங்குகளும் பறவைகளும் கூட இரவு வேளையில் மட்டும் இந்த காட்டுப்பகுதியை விட்டு வெளியேறிவிடுவது ஆச்சர்யப்படும் தகவலாகும்.

ஒவ்வொரு நாளும் இந்த கோயிலை திறக்கும்போதும் கட்டில் கலைந்து காணப்படுவதும், தண்ணீரும் உணவுகளும் உண்ணப்பட்டு காணப்படுவதும் இன்றுவரை நடந்துவரும் ஆச்சர்யமாகும்.

இரவில் கிருஷ்ணரும் ராதையும் இந்த கோயிலுக்கு வருவதாகவும் அப்பொழுதும் இந்த கோயிலை சுற்றி வளர்ந்திருக்கும் துளசி செடிகள் கோபியர்கலாக மாறி கிருஷ்ணருடன் ஆடி பாடுவதாக நம்பப்படுகிறது.

கிருஷ்ணரின் இந்த ராஜ லீலைகளை பார்க்க இந்த காட்டிற்குள் மற்றவர்களுக்கு தெரியாமல் மறைந்திருந்து பார்க்க முயற்சி செய்த அனைவருக்கும் சித்தம் கலங்கிவிடுவதாகவும் அல்லது கண்கள் குருடாகி விடுகிறது என்றும் இந்த பகுதி மக்களால் ஆச்சர்யத்துடன் கூறப்படுகிறது.

கிருஷ்ணர் தினமும் வரும் இந்த கோயிலை தரிசிப்பதற்காக தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் உலகம் முழுதும் இருந்தும் வருகை தருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*