7000 ஆண்டுகளாக நந்தியின் வாயிலிருந்து வரும் நீர் – அறிவியலால் விளங்க முடியாத அதிசயம்!

பழங்காலத்தில் கட்டப்பட்ட பெரும்பாலான கோயில்கள் ஒன்றிலிருந்து மற்றொன்று பல்வேறு தனித்தன்மையுடனும் தன்னுள் பல்வேறு அமானுஷ்யங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும். அவ்வகையில் கர்நாடக மாநிலத்திலிருக்கும் ஒரு கோயிலில் இருக்கும் நந்தி சிலை இந்த நாவீன யுக காலத்திலும் விஞ்ஞானிகளால் பதில் சொல்ல முடியாத அளவிற்கு அமானுஷ்யமாக விளங்கிவருகிறது.

கர்நாடக மாநிலத்திலுள்ள, மல்லேஸ்வரம் என்ற ஊரில் உள்ளது “தக்ஷிண முக நந்தி தீர்த்த கல்யாணி கோயில்”. இந்த கோயில் 7000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இந்த கோவிலில் உள்ள நந்தி சிலையின் வாயில் இருந்து எப்போதும் நீர் வெளிவந்தபடியே இருப்பது பெரும் ஆச்சர்யமாகும். 1997 ஆம் ஆண்டுவரை பூமியின் அடியில் புதையுண்டு இருந்த இந்த கோயில் உள்ளூர் அரசியல் வாதி ஒருவர் கட்டிடம் கட்டுவதற்காக பூமியை தோண்டியபோது எந்த சேதமும் இல்லாமல் கண்டுபிடிக்கப்பட்டது ஆச்சர்யமிகுந்த தகவலாகும்.

பொதுவாக மற்ற கோவில்களில் சிவ லிங்கத்திற்கு எதிராக நந்தி தேவரின் சிலை இருக்கும் . ஆனால் இந்த கோவிலில் நந்தி தேவரின் சிலை சிவனின் தலைக்கு மேல் அமைக்கப்பட்டுள்ளது. நந்தி தேவரின் வாயிலிருந்து வழியும் நீர் எப்பொழுதும் சிவபெருமானை குளிர்வித்தபடி இருக்கிறது.

நந்தியின் வாயிலிருந்து வரும் நீர் எங்கிருந்து வருகிறது என்பது இதுவரை யாராலும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிவ பெருமானின் மீது வழிந்த பின் இந்த நீர் அருகிலிருக்கும் குளத்தை சென்றடைவது போல் இந்த கோயிலின் கட்டுமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நந்தியின் வாயிலிருந்து எப்பொழுதும் வழிந்தபடியே இருக்கும் நீர் இந்த குளத்தை சென்றடைந்தாலும் குளத்தின் நீர்மட்டம் ஒரு குறிப்பிட்ட அளவை தாண்டி ஒரு அடி கூட உயர்வதில்லை இந்த நீர் எங்கிருந்து வருகிறது என்பது எப்படி மர்மமோ அதே போல் எங்கே செல்கிறது என்பதும் இந்த கோயிலின் மற்றொரு அதிசயமாகும்.

சிவபெருமானை அபிஷேகித்த பின் குளத்தில் சேரும் இந்த தீர்த்தத்தில் அபூர்வ சக்தி இருப்பதாகவும், இதை பருகினால் தீராத நோய்கள் எல்லாம் தீரும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்.

வாழ்க்கையில் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய கோயிலின் வரிசையில் தட்சிண முக நந்தி கோயிலும் ஒன்றேன்றால் மிகையல்ல.

Photo courtesy : ராமலஷ்மி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*