2021 ஆம் ஆண்டு எந்த ராசிக்காரருக்கு எந்த மாதம் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதை கீழே காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் ஜூன் மாதம் தங்களை கவனமாக கவனிக்க வேண்டும். ஏனெனில் இந்த மாதம் உங்களுக்கு சவாலான மாதமாக இருக்கும்.
எளிமையாக கூற வேண்டுமானால், டென்சன் அதிகரிக்கும் மற்றும் சண்டை சச்சரவுகள் உங்களைத் தேடி வரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் துரதிர்ஷ்டவசமான மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் மன அழுத்தம் உங்களை வாட்டி எடுக்கும்.
எந்த ஒரு விஷயத்திற்கும் கடுமையாக போராடுவீர்கள். குறிப்பாக தொழில் வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதமானது உலகமே உங்களுக்கு எதிராக இருப்பதைப் போல உணர்வீர்கள்.
இந்த மாதத்தில் நீங்கள் எந்த ஒரு விஷயத்தையும் செய்ய முடியாமல் கஷ்டத்தை அனுபவிப்பீர்கள்.
கடகம்
எந்த ஒரு பிரச்சனைகளையும் பேசுவதன் மூலமே தீர்க்க முடியும்.
ஆனால் செப்டம்பர் மாதம் உங்களுக்கு சவால் நிறைந்த கடினமான காலமாக இருக்கும். இந்த காலத்தில் நீங்கள் பல தவறான புரிதல்களால் கஷ்டப்படுவீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் சவாலான மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் உங்கள் பொறுமை சோதிக்கப்படும்.
இந்த மாதத்தில் நீங்கள் அதிகம் உணர்ச்சிவசப்படாமல் கோபத்தைக் கட்டுப்படுத்தி பொறுமையுடன் இருக்க முயற்சி செய்தால், இந்த காலமும் கடந்து போகும்.
கன்னி
தீட்டிய திட்டம் நடைபெறாமல் போகும் போது, நிச்சயம் அது வெறுப்பாக இருக்கும்.
மே மாதத்தில் கன்னி ராசிக்காரர்களின் திட்டம் கிட்டத்தட்ட எதுவும் வெற்றிகரமாக நடக்காது. எனவே இந்த மாதத்தில் எந்த திட்டத்தையும் போடாதீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் பேரழிவைத் தரும் மாதமாக இருக்கும்.
இந்த மாதத்தில் கிரகங்களின் நிலைகளால், மோசமான விளைவை ஏற்படுத்தும். இதனால் இந்த மாதத்தில் நீங்கள் நிதி சிக்கல்களில் சிக்கக்கூடும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் தொந்தரவு நிறைந்த மாதமாக இருக்கும். முக்கியமாக இந்த மாதத்தில் உங்கள் உறவு பதற்றம் மற்றும் சிக்கல்கள் நிறைந்ததாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு மே மாதம் முரண்பாடு நிறைந்த மாதமாக இருக்கும். இந்த மாதம் இந்த ராசிக்காரர்களை சிக்கலான சூழ்நிலையில் தள்ளும்.
தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் சிரமத்தை எதிர்கொள்வீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் சவால் நிறைந்த மாதமாக இருக்கும்.
இந்த மாதத்தில் செலவுகள் உங்கள் கையை மீறிப்போகும். இதனால் நீங்கள் இந்த மாதத்தில் பணப் பிரச்சனையை சந்திப்பீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு 2021 ஆம் ஆண்டு சிறப்பாக தொடங்கினாலும், டிசம்பர் மாதம் சிக்கலான மாதமாக இருக்கும். உங்கள் காதல் வாழ்க்கையை நேர்த்தியாக கையாள வேண்டும்.
இல்லாவிட்டால் உங்களின் காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியிருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் வீழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். இந்த மாதத்தில் நீங்கள் எந்த ஒரு விஷயத்திற்கும் தடுமாறுவதோடு, இம்மாதத்தில் மறதியும் அதிகமாக இருக்கும்.
என்ன தான் நேர்மறையாக நீங்கள் இருந்தாலும், திடீரென்று உங்களை மறந்து தொலைந்து போவீர்கள்.